Sunday, April 1, 2012

கடன்மிகு தேசம்

தட்டில் குலுங்கிடும்
          சில்லறைச் சத்தம்....
தேசம் பாடிடும்
          அவலச் சந்தம்!
 *
பிச்சை யெடுத்தால்
          சட்ட விரோதம்!
சமூகத்தால்
          தவிர்க்கப்பட்டவர்கள்
சட்டத்தால்
          தண்டிக்கப்படும் விநோதம்!!
*
அன்று
அந்நியனிடம் கைகட்டி
நின்ற நாம்...
இன்று
அவனிடம் கையேந்தி
நிற்கிறோம்!

இத்தேசத்தைத்
தண்டிக்கும்  சட்டம் ஏதும் உண்டோ?
 *
கண்டு பிடித்ததோ
          இங்கே சிற்சில...
கடன் கேட்பதோ
          இங்கே பற்பல!
 *
கேட்டும் கிடைக்காதது
          கிரயோஜெனிக் தொழில்நுட்பம்....
கேட்காமல் கிடைப்பது
          KFC சிக்கன் மட்டும்!    
*
அந்நிய மோகம்
          நம்மை மயக்கிவிட்டது!
நம் மூளையோ
          இன்று மழுங்கிவிட்டது!!
*
கார்ப்பரேட் உலகில்
போதையில் மிதக்கும் நாம்
அறிவியல் உலகில்
பேதையாய்த் தவிக்கிறோம்!!
*
நம்
முதுகுத்தண்டை
விற்று 
நாம் பெற்றது என்னவோ...
எலும்புத்துண்டுதான்...!
*
கடனாளியான
இத்தேசம் கண்டு....

கண்ணீர்த் துளிகளுடன்
          எழுதி முடிக்கிறேன்....
எடிசன் தந்த
          விளக்கொளியில்...!!!

No comments:

Post a Comment