உத்தமன் அறிமுகப் பாடல்
கமல் படங்களில் பாடல்கள் எப்போதும் சற்று வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும். உத்தம வில்லன் பாடல்கள் இதில் எவ்வகையிலும் ஏமாற்றமளிக்கவில்லை. வழமையான காதல் பாடல்கள் இதிலும் உண்டு அதைப்பற்றி எழுதத்தேவையில்லை. இதில் உத்தமன் கதையை மட்டும் (4 பாடல்கள்) எழுதுகிறேன்.
உத்தம வில்லன் பாடல்கள் 1
உத்தமன் அறிமுகப் பாடல் - (சுப்பு ஆறுமுகம்)
பாடல் வரிகள்....... கூத்துகளில், வில்லுப்பாட்டில் உள்ளதுபோல் எதுகை மோனை இயைபுகளுடன் அழகாகவே எழுதியிருக்கிறார் (சம்பளமின்றி நடனம் ஆடும் அம்பல நடராஜா எல்லாம் கமலின் குசும்பு வார்த்தைகளென்றே தோன்றுகிறது.). பாடும் விதத்தில் கொஞ்சம் கவனம்செலுத்தியிருக்கலாம். கமலின் குரலில் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக உள்ளதுபோல் கோரஸ் பாடுபவர்கள் உச்சரிப்பு சரியில்லை. (தில்லை நடராஜர் - நெல்லை நடராஜராகவும், தக்கை - சக்கையாகவும், சில சொற்களை உள் நாக்கிலேயே பாடி முழுங்கியும் விடுகிறார்கள்) அதுபோல் குறில் சந்தம் வருமிடங்களில் (உலக மகா கலைஞன்) நெடில் வார்த்தைகள் (மற்ற பாடல்களிலும் உண்டு) வருவதைத் தவிர்த்திருக்கலாம்.
(பின் வருபவை நான் பாடலை எப்படி கற்பனை செய்தேனோ அப்படி எழியுள்ளேன் அவ்வளவே)
ஊர் கூடியிருக்க...... மேடையில் நாடக அரங்கம். மக்களையும் அரங்கத்தையும் ஒருங்கே பார்க்கும் கோணத்தில் வில்லுப்பாட்டு பாடுபவர்கள் (அதே மேடையில் சற்று தள்ளி) அமர்ந்திருக்க பாடல் தொடங்குகிறது.
(வில்லுப் பாட்டுக்காரர்கள்)
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட - ஆமா
வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே...
தானதந்தத்தோடு ஏழு சந்தங்களும் தாளத்தோடு
காள பம்பை உறுமித் தக்கை துந்துமியோடு - ஆமா
துந்துமியோடு அத்தனையும் மேளத்தோடு...... என்று வில்லுப்பாடுப் பாடுவோர்கள் முடிக்க.
(கமல் நாடக மேடையில் தோன்றி அவரே பாட தொடர்கிறது பாட்டு )
(கமல் அர்ச்சுனராக)
தென்பாண்டிச் சீமைக் கூத்து
சேர நாட்டுத் தையஞ் சேர்த்து
சேர நாட்டுத் தையம் சேர்த்து
அர்ச்சுனரு பாசுப்தாஸ்த்ர(ம்)
வாங்கின கதை - ஆமா வாங்கின கதை
அமர்க்களமா ஆடப்போறோம்.....
(வில்லுப் பாட்டுக்காரர்கள்)
மேல வானம் கீழ பூமி மத்தியில்
உத்தம வில்லன் மத்தியில்
உத்தம வில்லன்
அரிதாரம் பூசும் சாமி உலகத்துக்கு - ஆமா
உலகத்துக்கு உபகாரி பிரம்ம ஞானி - ஆம
உபகாரம் பிரம்ம ஞானி
தந்தோம் தந்தோம் தரிகிட
தந்தோம் தந்தோம் சரிவர.........ஆஆ......
(கமல் அரசசுனராக)
அரசியல்வாதியவன் உண்மையைச் சொன்னார் போல்
அதிசயம் நானும் கண்டேன்.
நயன கர சிரசு உடல் அவயவங்கள் மோகிடவே
சகல கலை தீட்சை பெற்றேன்.
ஆதி சிவன் பாதி உமை அதிசயித்த தவமோ
அர்ச்சுனனின் பேர் சொன்னால் அச்சமுறும் உலகோ
(இதற்கிடையில் அர்ச்சுனனின் பாசுபதக் கதை முடிந்திருக்கும் )
(வில்லுப் பாட்டுக்காரர்கள்)
பாசுபத அஸ்தரம் சாசுவதமாகும்
வெற்றி மிகு விஜயன் உலக மகா கலைஞன்
சிவமே.... தவமே
சங்கரன் அருளால் பொங்கும் மங்களம்
எங்கும் தங்குகவே
சிவசிவ சிவசிவ சிவகாமிக்கு தில்லை நடராஜா
சம்பளமின்றி நடனம் ஆடும்
அம்பல நடராஜா
தன்பதம் கொண்டு தையம் ஆடும்
அர்ச்சுன மகராஜா...
ஒருகால் தூக்கி ஆடுவதேனோ
இருகால் ஆட்டம் மயக்கம் தானோ.
சிரசில் கங்கை கரத்தில் உடுக்கை அருகில் மங்கை
அருளும் அன்னை
சங்கர சங்கர சங்கர சங்கர......
பாடலைக் கேளுங்கள். பண்ணுக்கேற்ற வார்த்தைகள் எங்கும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள்.
_____________________________________________
குறிப்பு 1 : வைரமுத்துவை இந்தப் பாடலை எழுத வைத்திருக்கலாம்
குறிப்பு 2 : இதே tune க்கு வைரமுத்து ரஜினிக்கு செம மாஸான ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
சிங்கமொன்று புறப்பட்டதே.... அதுக்கு நல்ல காலம் பொறந்துருச்சி, நேரம் நெருங்கிருச்சி....

No comments:
Post a Comment