நடைமேடை

முதலில்
பாதசாரிகளுக்காகத்தான்
அமைக்கப்பட்டது......

பின்பு
அது உருக்கொண்ட
பரிமாணங்கள்
பிரம்மிப்பூட்டுபவை......!

காலையில்
தொப்பை குலுங்க
நடப்பவர்களுக்காக...........

உதவாத கால்கள்
தரையில் உராய
ஊர்ந்து வரும் அந்த
மாற்றுத் திறனாளிக்காக.........

தினமும் முதுகு கூன
புத்தக மூட்டை
தூக்கிச் செல்லும் அந்தச்
சிறார்களுக்காக..........

கைகோர்த்து நடக்கும்
காதலர்களுக்காக...........

சுட்டு விரல் பிடித்து
நடக்கும் குழந்தைகளுக்காக......

தொலைந்த நிம்மதியை
அங்கேயும் வந்து தேடும்
முதியவர்களுக்காக.......

சாஷ்டாங்கமாக படுத்து
ஓய்வெடுக்கும் நாய்களுக்காக......

இரவு மட்டும் கூட்டம் வழியும்
கையேந்தி பவன்களுக்காக.......

இதை
தெய்வம் தந்த வீடாகக் கருதும்
ஆதரவற்றவர்களுக்காக.......

ஓரமாய் நின்று
பேரம் பேசும்
பச்சைக் கிளிகளுக்காக.....

இன்னும் யார் யாருக்காகவோ
தன்னைத் தொடர்ந்து
தகவமைத்தபடி வரும்
இதோ இந்த நடைமேடை!

எங்களுக்காக
எங்கள் கவிதைகளுக்காக
கொஞ்சம் பரிணமித்துள்ளது........

இதோ இணையத்தில்
நடைமேடை.......!!!

வாருங்கள் நடைபோடலாம்......!!!
                                       
                                                  -  அசோக் குமார் மற்றும் யாழ்




No comments:

Post a Comment