எண்விழிகள் இருந்தும்
என்ன பயன்?
பிரம்மனின் வரிகளில்
எழுத்துப் பிழை!
விளைவு....
கனவே கற்பனையாகிப்
போன உயிர்கள்!!
கயவனைக் கழுவிலேற்றி
என்ன பயன்?
கை விலங்கிட்டு
என்ன பயன்??
விழிகள் கொடுக்க
வழிகள் இருக்க
பிரம்மன் இழைத்த
பிழைகள் திருத்தி
இனி ஒரு விதி செய்வோம்!!!
No comments:
Post a Comment