Saturday, June 1, 2013

எண்ணிக் கலங்குமென் நெஞ்சு

விளைநில மெல்லாம் விலைநில மாகி
மலைவளம் நீர்வளம் நீங்கி - உலகெங்கும்
மண்ணெலாம் விண்ணெலாம் மாசுற்று நிற்பதை
எண்ணிக் கலங்குமென் நெஞ்சு.

No comments:

Post a Comment