Sunday, May 6, 2018

இளமை என்னும் பூங்காற்று

கல்லூரியின் ஆரம்ப நாட்களில் என்னிடம் மொபைல் கிடையாது. நண்பர்களில் சிலர் மட்டும் வைத்திருந்தனர். யாரிடமாவது வாங்கி பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்பேன். சில நேரங்களில் ஒரேமாதிரியான ப்ளேலிஸ்டுகளைக் கேட்பதில் சலித்துப் போய் எஃப்எம் பக்கம் செல்வேன்; சிலரது மொபைல்களில் எஃப்எம் வசதி மட்டுமே இருக்கும் என்பதும் காரணம்.

கொடைக்கானல் எஃப்எம் என்று நினைக்கிறேன். மாலைநேரங்களில் தொடர்ச்சியாக இளையராஜா பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். சிக்னல் கிடைக்க ஜன்னலின் வழியே ஹெட்செட்டை வெளியே போட்டுவிட்டு கேட்டுக்கொண்டிருப்பேன். பள்ளி காலத்தில் தீவிர ஏஆர் ரஹ்மான் ரசிகனான நான் இளையராஜா பக்கம் சாய்ந்தது இந்தக் காலகட்டத்தில்தான். இளையநிலா பொழிகிறதே' 'இளமை என்னும் பூங்காற்று' எனது ஃபேவரைட் பாடல்கள்.

பொதுவாக இளையராஜா பாடல்களின் வீடியோக்களை பார்ப்பதில்லை. பாரதிராஜா உட்பட பெரும்பாலான இயக்குநர்கள் காட்சியமைப்பால் பாடலைக் கெடுத்து வைத்திருப்பார்கள். பாலுமகேந்திரா உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் விதிவிலக்கு.

சமீபத்தில் ஸ்ரீதேவி இறப்பின்போது அவரது பாடல்கள் எல்லாம் யூட்யூபில் பரிந்துரைகளாக வந்தன. அப்போதுதான் 'இளமை என்னும் பூங்காற்று' அவர் நடித்தது என்று தெரிய வந்தது. பாடலை பார்க்கும்போது அந்த ஹீரோவைக் கவனித்தேன்.  எந்த ஒரு பாவனையும் இல்லாமல் மரம் மாதிரி முகத்தை வைத்திருக்கிறார். என்னைப் போலவே இஞ்சி தின்ற ரியாக்சன்தான் பாடல் முழுவதும். இயக்குநர் கொஞ்சம்கூட மனசாட்சியே இல்லாத மனிதராகத்தான் இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment