டெல்லி சம்பவத்தைவிடக் கொடுமையானது; விழுப்புரம் சம்பவத்திற்கு இணையானது என்று சிலர் ஒப்பீடு செய்து கொண்டிருக்கின்றனர். எதுவாக இருந்தாலும் தவறு தவறுதான். தங்களது மதத்தின் வலிமையை, அதிகாரத்தை ஒரு எட்டு வயது சிறுமியின்மீது செலுத்தி நிரூபிக்க நினைப்பதும், அதற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு அரசியல் பலத்தை வைத்து தப்பிக்க வைக்க நினைப்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். எந்தக் கடவுளும் காப்பாற்றவில்லையே என்று தர்க்கங்களுடன் ஒரு கூட்டம். மொழிப் புலமையையோ, தர்க்கங்களையோ காண்பிக்கும் நேரம் இதுவல்ல. ஆசிபாவிற்கு இனி நீதி இல்லை. குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை தவறிவிடக் கூடாது. ஆனால் வெறும் தண்டனை நிரந்தரத் தீர்வல்ல; நீதியுமல்ல. சாதி, மத, இனம், மொழி, பாலினம் கடந்து மனிதத்தைக் கற்பிப்பதே அவசியமாக இருக்கிறது. அடிப்படையே பிறழ்கையில் எத்தகைய உயர்ந்தகொள்கைகளும் கோட்பாடுகளும் வீண்தான். அடிப்படையில் இருந்து தொடங்குவோம். சட்டங்கள், தண்டனைகள் இரண்டாம்கட்ட தீர்வுகள்.
👌
ReplyDelete