அவளுக்கு வழிவிட்டு இவன் நிற்க, தனது பையை இவனிடம் கொடுத்துவிட்டு இவனை நோக்கியபடியே ஜன்னல் சீட்டில் அமர்ந்தாள். இவனது பையையும் சேர்த்து மேலே வைத்துவிட்டு அவளருகே அமர்ந்தான். டிவியில் புதுப்பட பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தன. ஜன்னல் கண்ணாடியை மூட முயற்சித்து தோற்றுப் போய் இவனைத் திரும்பிப் பார்த்தாள்.
"இருக்கட்டுமே! "
"தலை கலைஞ்சிரும். காலையில பேய் மாதிரி இருப்பேன். பரவாயில்லையா? "
"பரவாயில்ல. இருக்கட்டும்"
"இல்ல... முடியாது. க்ளோஸ் பண்ணு", என்று பின்சாய்ந்து வழிவிட்டாள். அவளைக் கடந்து சிறு போராட்டத்திற்குப் பிறகு மூடினான்.
"நீயெல்லாம் சுத்த வேஸ்ட்'டா", என்றாள்.
"ஹே! நல்லாவே டைட்டா இருந்துச்சு. உடனே இப்படி சொல்லிரு"
"லூசுப் பையா. அது இல்ல. விடு"
"வேற என்ன? "
"டேய் தத்தி! பஸ்ல நம்மளோட சேர்த்து ஆறு பேருதான். சரியான மாங்கா. தேற மாட்டடா நீ"
"அஹான். அதுக்குனு காய்ஞ்ச மாடு மாதிரி பாய சொல்றீயா? "
"த்த்தூ", என்று நாக்கை அழுத்திய அளவுக்கு சத்தம் வராதபடி மெல்ல ஒலித்துவிட்டு, "இந்த மாதிரி கிடைக்கிற சான்ஸஸ் ரொமான்ஸா மாத்துறதுலதான் கிக்." காதலின் வரவேற்பாய் ஒரு கண்சிமிட்டல்
"ஓஹோ", என்றபடி பதிலில்லாமல் நேரே திரும்பிக் கொண்டான்.
அவனது முகத்தை தன்னை நோக்கித் திருப்பியவள், "என்டா? இப்படி ஓப்பனா பேசுறாளேனு நினைக்கிறீயா? "
"ச்சீ! I too never want a passive partner. ", என்று அவளது பின்னந்தலையை பிடித்து இழுத்து அவளது உதடுகளோடு இவனது உதடுகளைப் பூட்டிக் கொண்டான்.
அதிர்ச்சியில் அவளது கண்ணிமைகள் சில கணம் சிறகடித்து மூடிக் கொண்டன. இடுப்பிலிருந்த அவனது கை சற்று மேலெழும்பவும் வழிமறித்து விரல்களை விரல்களோடு கோர்த்துக் கொண்டாள்.
நிகழ்கால நினைவு திரும்பவும் அவனை பின்னோக்கி தள்ளிவிட்டு தன்னிலை அடைந்தாள். மூச்சிரைத்தவளாய் புன்னகையுடன் அவனை முறைத்தாள்.
தனது நாவினால் உதட்டை ஒருமுறை ஈரப்படுத்திக் கொண்டான்.
"என்ன'டா"
"பிரியாணி டேஸ்ட். பிரியாணியா சாப்பிட்டு வந்த?"
"ச்சீ.. நாயே! ".
டிவியில் 'நான் சொன்னதும் மழை வந்துச்சா' பாடல். ஒருகணம் நோக்கியவள் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.
"ஏன்டா.. சினிமால இப்படியெல்லாம் நடிக்கிறாங்களே.. இப்படி சீன்'ல எல்லாம் மூட் ஆயிடாதா?"
"அதெல்லாம் ஆகாது லூஸூ. "
"அதெப்படி வராம இருக்கும்?"
"அது அவங்க புரஃபஷன். அதெல்லாம் வராது"
"ஆஹான்", தன் வழக்கமான கண்சிமிட்டலால் கண்ணொப்பமிட்டாள்.
சிறு யோசனைக்குப்பிறகு,
"நாம எல்லாம் எவ்வளவோ பரவாயில்ல'ல", என்றாள்.
"எத சொல்ற?"
"நமக்குள்ள அட்லீஸ்ட் இதெல்லாம் இருக்கு. பட் முப்பது வயசுக்கு மேல கல்யாணமும் ஆகாம சிங்கிளாவே இருக்குறவங்கள யோசிச்சு பாரு. நம்மாளுங்க ரூல்ஸ் வேற இதுல. அது சரியில்ல.. இது சரியில்ல.. ஜாதகம் பொருந்தல, நேரம் சரியில்ல, மயிரு மட்டைனு முப்பது வயசுக்கு மேல வர கல்யாணமும் பண்ணி வைக்கமாட்டாங்க. ஆனா பையனோ பொண்ணோ எந்தத் தப்பும் பண்ணாம அதுவரை ஒழுக்கமா இருக்கணும்."
"ரொம்ப கஷ்டந்தான்"
"என்ன'டா? பேசப் புடிக்கலனா பேசாத. கடமைக்குனு பேசாத. "
"தூக்கம் வருது பேபி"
"ஒழிஞ்சு போ"
****
பேசிக் கொண்டிருந்தவன் அப்படியே அயர்ந்துவிட்டான். அவனது கைகளைக் கோர்த்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் தூங்குவதைப் பேருந்தின் இருட்டொளியில் இரண்டு புகைப்படங்களும் எடுத்து வைத்தாள்.
தூக்கத்தின் நடுவே விழித்தவன் அசதியான குரலில் "நீ தூங்கலியா", என்றான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் 'இல்லை' என்பதாய் இடவலமாய் தலையசைத்தாள். அவளது கன்னத்தை மெதுவாக தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தான்.
நேரம் கடந்தது. பேருந்தில் விளக்கொளி முளைத்தது. அவனைத் தட்டி எழுப்பி, "வந்துடுச்சு", என்றாள்.
எழுந்து அவளது பையை எடுத்துவிட்டு வழிவிட்டு நிற்க எழுந்து வெளியே வந்தாள். பையை வாங்கியவள் பகுதியாக அவனை அணைத்துக் கொண்டாள். பின் தலையில் கைவைத்து வழியனுப்பி வைத்தான்.
"விட்ராத'டா", என்று அவனது கண்களைப் பார்த்தபடியே நகர்ந்தாள்.
****
சில நிமிடங்களில் செல்போனில் அழைப்பு.
"ஆட்டோ ஏறிட்டேன்'டா. He asked me 150 rupees. I didn't bargain. Feeling little nervous. Talk until I reach.", கடகடவென்று ஒப்புவித்தாள்.
தொடரும்...
No comments:
Post a Comment