Saturday, March 31, 2012

குழந்தை (எ) கடவுள்

எதை எதையோ செய்து
அழகாக இருக்கப் பார்க்கிறோம்
நாம் .......

எதைச் செய்தாலும்
அழகாயிருக்கிறது
குழந்தை....

எதை எதையோ செய்து
சந்தோசமாய் இருக்கப் பார்க்கிறோம்
நாம் .......

எதைச் செய்தாலும்
சந்தோசமாய் இருக்கிறது
குழந்தை....

எதை எதையோ எண்ணி
கவலைப் படுகிறோம்
நாம் .......

எதையும் எண்ணாததால்
கவலையின்றி இருக்கிறது
குழந்தை......

எதை எதையோ கேட்டு
கோயிலுக்குப் போகிறோம்
நாம்....

எதையும் கேட்காததால்
கடவுள் ஆகிறது
குழந்தை.......




No comments:

Post a Comment