என்ன இது ?
நீங்கள்
காண்பது
வேறொன்றுமல்ல
........
நாம்
குடிக்க
நீர்
கொடுத்து (நம்மால்)
நீர் இழந்து
நா
வறண்ட
தாயின்
நாவு..........
நாம்
நடக்கப்
பூ
விரித்து (நம்மால்)
முள்
நடந்து
கால்
பிளந்த
தாயின்
பாதம்.........
நாம்
உண்ணப்
பால்
கொடுத்து (நமக்காக)
பால்
சுரக்கக்
காத்
திருக்கும்
தாயின் மார்பு..........
No comments:
Post a Comment