Sunday, February 17, 2013

விலைமகள் ஓலம்

அரவயிறு சோத்துக்கு
                அடிவயித்த அடகு வெச்சேன்...
அவமானம் கூடிருச்சு!
                அடையாளம் போயிருச்சு!

அவுத்து அவுத்து சேல கட்டியே
                 ஆயுசெல்லாம்  போயிருச்சு...
இந்தப் பாவி மவ ஆச வெக்க
                  நேரமில்லாம போயிருச்சு!

தேவிடியானு பேரு வெச்சு ...
                  ஊரவிட்டு ஒதுக்கி வெச்சு...
நீ எறக்கி வெச்ச பாரம்
                  ஏ வயித்துல வந்து சேந்துருச்சு!

அரளிவெத அரச்சு வெச்சு
                 கருமங்கழிக்க நெனக்கையில
சவத்தத் தூக்கி போட நாதியில்லனு
                 நெனப்பு வந்து சேந்துருச்சே!!!
                    

No comments:

Post a Comment