தும்பிகள் தேடியோடி வீதியில் கூடியாடிப்
பம்பரம் சுற்றும் வயதினில் - நம்மக்கள்
கண்டக நூல்கலேந்திக் கூனி நடப்பதை
எண்ணிக் கலங்குமென் நெஞ்சு.
பற்றிடும் ஆர்வத்தால் கேள்விக் கனைதொடுத்துக்
கற்றிடும் ஞானமாம் கல்வியன்றி - வெற்றுமதிப்
பெண்ணுக்காய் நெட்டுருத்திக் கக்கவைக்கும் கல்வியை
எண்ணிக் கலங்குமென் நெஞ்சு.
உன்னில் எரியும் வெறுப்புக் கனலாலே
என்னில் அனல்பட வாடுகின்றேன் - என்னிலுன்
கண்ணில் எரியும் கனலால்நீ என்னாவாய்

No comments:
Post a Comment