என் முன்னோர்களும் சுயநலவாதிகள்தான்
அவர்கள் சுயநலத்துள் அவர்கள் இருந்தார்கள்
அவர்களுள் இந்த உலகமே இருந்தது.
அதன் பின்னோர்களும் சுயநலவாதிகள்தான்
அவர்கள் சுயநலத்துள் அவர்கள் இருந்தார்கள்
கூடவே இந்த நாடே இருந்தது.
என் பெற்றோர்களும் சுயநலவாதிகள்தான்
அவர்கள் சுயநலத்துள் அவர்கள் இருந்தார்கள்
அவர்களுடன் நாங்கள் இருந்தோம்
எங்கள் எதிர்காலமும் இருந்தது.
நானும் சுயநலவாதிதான்
என் சுயநலத்துள் நான் இருக்கிறேன்
நான் மட்டும்தான் இருக்கிறேன்.
என் எதிர்கால சந்ததியினர் கூட இல்லை.......
(யாரு எக்கேடுகெட்டா எனக்கென்ன?)
No comments:
Post a Comment