Friday, June 28, 2013

யோசனை

கன்றுக்குட்டியின் முகத்தைத்
தடவ அழைக்கும் (இழுக்கும்)
தந்தையின் கைகளிலிருந்து விலக
தனது ஒரு கையை விடுவித்தவாரும்.....
கன்றை நோக்கி முன்னேர
எத்தனித்து
எடுத்த பாதம்
காற்றில் முன்னும் பின்னும்
சென்றுவர
சந்தேகமும், ஆச்சரியமும்,
பயமும் மிளிரும்
அந்தக் கண்களை
உருட்டி உருட்டி
அந்த குழந்தை
என்னதான்
யோசித்துக்கொண்டிருக்கும்?

No comments:

Post a Comment