Friday, July 26, 2013

உண்டது அறல் இனிது

கீழ்க்காணும் திருக்குறளைப் படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.
இப்படி ஒரு உவமையை திருவள்ளுவரிடம் நான்  எதிர்பார்க்கவில்லை.

உணலினும் உண்ட தறலினிது காமம் 
புணர்தலின் ஊடல் இனிது.

(இதைப் படித்தவுடன் இப்படி தான் பொருள் உணர்ந்து கொண்டேன் அதுதான் சிரித்ததற்கு காரணம்)

சாப்பிடுவதைக் காட்டிலும் ஆய்போவது சுகம் அதேபோல் காமத்தில் கூடுவதைக் காட்டிலும் செல்லமாக சண்டைபோடுதல் (ஊடல்) சுகமானது.

அப்படின்னு நெனச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன் அனா உரை படித்தேன் 

உணலினும் - உண்பதை விடவும், உண்டது அறல் இனிது - உண்ட உணவு செரித்தல் சுகமானது அதேபோல், காமம் புணர்தலின் - காமத்தில் உடலுறவு கொள்வதை விட, ஊடல் இனிது - காதலர்களுக்குள் எழும் சிறிய பிணக்குகள் சுகமானது.

எனக்கு என்னவோ உண்டது அறல் என்பது உணவு செரிமானத்தை விட உணவு கழிவாய் வெளியேறுவதைத் தான் குறிப்பதாக நினைக்கிறேன். ஏனென்றால் கழிவு வெளியேற்றம் என்பது இயற்கையாகவே சுகமான அனுபவம் அதனால் யாரேனும் தமிழறிஞர்கள் என் சந்தேகத்தை தீர்த்துவைக்க வேண்டும்.

No comments:

Post a Comment