எதுகையும் மோனையும் தமிழின் செருப்புகள் என்றே சொல்லலாம். ஒவ்வொரு அடியிலும் தமிழுக்கு கால் நோகக்கூடாதென்று கவிஞர்கள் தைத்துப் போட்டுவிடும் செருப்புகள் அவை. ஓரிடத்தில் எதுகை மோனை அமையவும் அதே கவிதையின் வேறு இடத்தில் அமையாமலும் இருந்தால் ஒரு காலில் ஒரு செருப்பையும் அடுத்த காலில் வேறு வடிவான செருப்பையும் அணிந்ததுபோல் படிப்பதற்கு சற்றே அசௌகரியமாக இருக்கும்.வேறொரு வகையிலும் எதுகை மோனைக்கு செருப்பு என்ற உவமை பொருந்தும். அது எல்லா நேரங்களிலும் கால்களுக்கு செருப்பு தேவைப்படுவதில்லை என்பதுதான்.
ஓசை நயத்திற்கும் ,ஓசை அமைதிக்கும் ஒரு சூத்திரமாக எதுகை மோனை இருந்து வந்து உள்ளது .எதுகை
மோனை தொல்காப்பியத்திலிருந்தே தொடர்ந்து
பயன்பட்டுவந்தது மட்டுமல்ல பழங்காலத்து
நாட்டுப் பாடல்களிலும் ஓசை நயம் அமைய
இயல்பாகவே எதுகை மோனை
அமைத்தே அமைந்துள்ளதாயும் காண்கிறோம்.
மிகவும் தொன்மையான இந்தப் பாடலின்முதல் வரியாவது குறைந்தபட்சம் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும் (அல்லது தெரிந்திருக்க வேண்டும்).
அந்த நாட்டுப்புறத் தாலாட்டுப் பாடல்.
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரடிச்சு நீயழுதாய் கண்மணியே கண்ணுறங்கு கண்ணே யடிச்சாரார் கற்பகத்தைத் தொட்டாரார் தொட்டாரைச் சொல்லியழு தோள் விலங்கு போட்டு வைப்போம் அடிச்சாரைச் சொல்லியழு ஆக்கினைகள் செய்து வைப்போம் மாமன் அடித்தானோ மல்லி பூ செண்டாலே அண்ணன் அடித்தானோ ஆவாரங் கொம்பாலே பாட்டி அடித்தாளோ பால் வடியும் கம்பாலே ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ ஆரடிச்சு நீயழுதாய்
கண்மணியே கண்ணுறங்கு
என தாலாட்டுப் பாடலிலேயே மோனையின் மேலாதிக்கம் ஓங்கி இருப்பதைக் காணலாம். இந்தப் பாடல் தொல்காப்பியத்துக்கும் முந்தயதாகவும் இருக்க வாய்ப்புண்டு.நம் கிராமங்களில் வாய்மொழி இலக்கியங்களான விடுகதைகள், பழமொழிகள், ஏன் வசைகள் கூட எதுகை மோனையுடன் இருப்பதைப் பார்த்திருப்போம்.
எடுத்துக்காட்டாக
அரசனை நம்பி
புருசனைக் கைவிட்ட கதை...
யானைக்கொரு காலம்வந்தால்
பூனைக்கொரு காலம்வரும்.
அச்சாணி இல்லாத தேர்
முச்சாணும் ஓடாது
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
இதுபோன்று எதுகையும் மோனையும் சர்வ சாதாரணமாக அமைந்த பேச்சுவழக்கு நம்முடையது.
நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா
மலைமீது ஏறிவா
மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவீட்டில் வை
நல்லதுதி செய்.
இந்தப் பாடலை நாம் யாராவது மறக்க முடியுமா?
ஏன் எதுகை மோனை என்ற தொடரையே எகன மொகனையாஎன்று எதுகைப்படுத்திதான் நம் பேச்சு வழக்கு அமைந்துள்ளது.
நாட்டுப்புற இலக்கியங்களின் அழகே அதில் அமைந்த இயல்பான எதுகை மோனையில்தான் உள்ளது.
ஒரு நாட்டுப்புற காதல் பாடல்
நாலு மூலை வயலுக்குள்ளே நாத்து நடும் பொம்பிளே நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு நண்டு சாறு காய்ச்சி விட்டு நடு வரப்பில் போற பெண்ணே - உன் தண்டைக் காலு அழகைக் கண்டு கெஞ்சுறானாம் அஞ்சு மாசம் நானும் கொஞ்சம் ஏழையடி நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
சரி எதுகை மோனை என்பவை அமைப்பதில்லை அமைவது என்று சொன்னேன் அதற்கு ஓர் உதாரணம் ஒப்பாரிப் பாடல்கள்.ஒருவர் இறந்ததற்கு பாடும் பாடல்களில் இவ்வளவு மெனக்கெட்டு யாரவது உட்கார்ந்து யோசித்தா எதுகையும் மோனையும் அமைய பாடல் படித்திருப்பார்கள்.
இதோ எதுகை மோனை
நிரம்ப அமைந்த ஒரு மனைவியின் ஒப்பாரி.
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு நான் ஒய்யாரமா வந்தேனே இப்ப நீ பட்ட மரம்போல பட்டு போயிட்டையே. பொட்டு இல்ல பூவில்லை பூச மஞ்சலும் இல்ல நான் கட்டன ராசாவே என்ன விட்டுத்தான் போனிங்க. பட்டு இல்லை தங்கம் இல்லை பரிமார பந்தல் இல்ல படையெடுது வந்த ராசா பாதியியில போரிங்க்கலே நான் முன்னே போரேன் நீங்க பின்னே வாருங்கோ என சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா. நான் காக்காவாட்டும் கத்தரனே, உங்க காதுக்கு கேக்கலையா கொண்டுவந்த ராசாவே உங்களுக்கு காதும் கேக்கலையா.
எதுகையும் மோனையும் நம் ஜீன்களிலேயே பதிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு இயல்பாக இது எப்படி சாத்தியம்?
இதுவரை எதுகை மோனையின் இயல்பைப் பார்த்தோம் இனி அதன் பயனை பார்க்கலாம்.
எதுகை மோனைகளால் பயன் என்ன இருக்கமுடியும் என்கிறீர்களா? நம் மனதிற்குள் எளிமையாக நிற்கும் பாடல்கள் இசைபாடும்படி அமைந்த பாடல்கள் தாம். அதில் இசைப்பாக்கள் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவை இசைப்பாக்கள் எனவும் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடிய பாடல்கள் இயற்ப்பாக்கள் எனவும் வகுத்தார்கள். அதில் இயற்பாக்களான வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா என எல்லாவற்றுக்கும் எதுகை மோனைபட எழுதுவது சிறப்பு என சொல்லப்பட்டுள்ளது. இயற்ப்பாக்களிலும் இசை குன்றாது ஒலிக்க இப்படி சொல்லப்பட்டது. அப்படி அமைந்த
பாடல்கள் நம் மனதைவிட்டு எளிதில் நீங்காது, மிக எளிதாக மனதில் நின்றுவிடும். எதுகையும் மோனையும் மிக எளிய இசை வடிவங்கள் எனலாம். அதனால்தான் நம் பண்டைய கல்வி முறையில் பாடங்கள் அனைத்தும் பாடல்களாகவே இருந்திருக்கி ன்றன
சில சமயங்களில் உரைநடையும் இசைவடிவில் எதுகை மோனை அமைய பெற்று என்றும் நம் மனதில் இடம் பெறுவதுண்டு பராசக்தி வசனங்களும், கட்டபொம்மன் வசனங்களும் இப்படிப்பட்டவயே இன்று வரை புகழ்பெற்று விளங்கும் PUNCH DIALOGUES உம் நகைச்சுவை வசனங்கள் பெரும்பாலானவை எதுகை மோனை அமைந்தே இருக்கின்றன.இதில் திரையிசைப் பாடல் என்றால் கேட்கவே வேண்டாம்.
எனக்கு மிகவும் பிடித்த வாலியின் பாடல்களில் ஒன்று
அல்லி விழியோரம்
அஞ்சனத்தைத் தீட்டி
அந்திவண்ணப் பின்னல் மீது தாழைமலர் சூட்டி
ஆதிமுதல் அந்தம்
ஆபரணம் பூட்டி
அன்னம் இவள் மேடைவந்தாள்
மின்னல் முகம் காட்டி
கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை
எதுகையும் மோனையும் மிக சிறப்பாக அமைந்த இதுபோன்ற பாடல்கள் ஏராளம்.
எதுகையும் மோனையும் இருப்பது சிறப்புதான்
இருப்பினும் நுண்ணிய உணர்வுகளை, ரசனைகளை பிரதிபலிப்பதில், மிக எளிமையாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் விளங்குவது நம் புதுக்கவிதைகள்தான்
மணல் அல்லும்
லாரியிலிருந்து
வழிகிறது
ஒரு
நதியின் கண்ணீர்.
..........................(பெயர் தெரியவில்லை)
உடைந்த வளையல் துண்டு
குளத்தில் எறிந்தேன்
அடேடே !
எத்தனை வளையல்கள்.
..........................அறிவுமதி
ஒரு சொட்டு மழைத் துளி
தன் மீது விழுந்துவிடக் கூடாது எனும்
கவனத்தில்
குடை விரித்து நடையிறங்கி
அலுவலகம் நீங்கும் பெண்
வலப் பக்கம்.
எல்லாத் துளியும் என் மேல் விழட்டும்
என்பதாக
முற்றிலும் நனைந்து, அசையாமல்
முகம் தூக்கி நிற்கிற கருப்புப் பசு.
இடப் பக்கம்.
ஊழையும் உப்பக்கம் காணத்
தாழாது உஞற்றுகிற நான்
தன்னந்தனியாக நடுவில்
………………………………………………………………………………..கல்யாண்ஜி
என சொல்லிக்கொண்டே போகலாம்.
எதுகை மோனை இல்லாத கவிதைகளும் சிறப்பானதுதான் என்ன கொஞ்சம் நீளமான கவிதைகள் மனதில் எளிதில் நிற்பதில்லை அவ்வளவுதான்.

(நன்றி : களஞ்சியம்)
No comments:
Post a Comment