கீர்த்தனை:
பல்லவி:
வஞ்சி வந்தனளே
மலைகுற
வஞ்சி வந்தனளே
அனுபல்லவி:
வஞ்சி எழிலப
ரஞ்சி வரிவிழி
நஞ்சி முழுமர
நெஞ்சி பலவினில்
அஞ்சு சடைமுடி
விஞ்சை அமலனை
நெஞ்சில்
நினைவொடு முஞ்சு குறிசொல - வஞ்சி வந்தனளே....
சரணம்:
ஆடும்
இருகுழைத் தோடும் ஒருகுழற்
காடும்
இனைவிழி.......சாடவே
கோடு பெருமுலை
மூடு சலவையி
னூடு
பிதுங்கிமல்...........லாடவே
தோடி முரளிவ
ராளி வயிரவி
மோடி
பெறவிசை.........பாடியே
நீடு மலைமயி
லாடு மலைமதி
சூடு மலைதிரு
கூட மலைகுற - வஞ்சி வந்தனளே
- திரிகூட
ராசப்பகவிராயர்
அதே சந்தத்தில் எனது முயற்சி........
பல்லவி:
வஞ்சி வந்தனளே
மழையெனும்
வஞ்சி
வந்தனளே.......
அனுபல்லவி:
மிஞ்சு
கடலினில் விஞ்சு கதிரவன்
மஞ்சு குவளயில்
கொஞ்ச முகந்திட
நஞ்சு உலகினில்
பஞ்ச மழிந்திடக்
கெஞ்சு
முழவர்கள் நெஞ்சு குளிர்ந்திட - வஞ்சி வந்தனளே.....
சரணம்:
காடு மலைகளில்
ஓடை குளங்களில்
ஓடும்
நதிகளில்...........ஆடியே
நாடு நகர்களில்
தாள ஜதியுடன்
ஆடி
யிடியுடன்.............பாடியே
நீடு வனங்களும்
வாடும் பயிர்களும்
கோடி
உயிர்களும்.......வாழவே
பாடு மழைவிளை
யாடு மழைசதி
ராடு மழைபுவி
கூடு மழையெனும் - வஞ்சி வந்தனளே......
- யாழ்
No comments:
Post a Comment