Saturday, November 23, 2013

"சென்னையில் பஸ் பயணங்கள்" (மாநகரப் பேருந்துகளில் )


ஒரே நாளில் பேருந்தில் நடந்த இந்த மூன்று சம்பவங்கள் பற்றி சொல்ல வேண்டும்
1.  
கலையில் 8 மணி அளவில் பள்ளிக்கரணையிலிருந்து பேருந்து ஏறினேன் ஒரகுடத்தில் ஒரு நேர்முகத்தேர்விற்கு செல்ல வேண்டும் தாம்பரம் பேருந்தில்.............பேருந்தில் எல்லா நிறுத்தங்களிலும் மாணவர்கள்  ஏறியவண்ணம் இருந்தார்கள். என்னை கதவோடு கதவாக சாத்தியபடி நெருக்கியிருந்தார்கள். அடுத்த நிறுத்தத்தில் இரண்டு மாணவிகள் ஏறினார்கள் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை ஏற்கனவே புட்போர்டில் நின்றவர்கள் இப்போது நிற்கக்கூட முடியாத நிலை. கண்டக்டர் எல்லோரையும் படிக்கட்டுக்கு மேலே ஏறச்சொன்னார்....கதவை மூட வேண்டுமாம்....முடியவில்லை என்றார்கள் அவர்கள் பள்ளி மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்..."அப்புறம் ஏம்ப்பா பஸ்ல ஏற்றீங்க" //
இது என்ன சார் கேள்வி நேரத்திற்கு பள்ளி செல்ல வேண்டாமா...அந்த வழியில் வரும் எல்லா பேருந்துகளின் நிலையும் இதுவென்றால் எப்படித்தான் மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் செல்வதாம்......

2.
தாம்பரத்திலிருந்து - ஒரகுடம் பேருந்து.... ஒரு பெரியவர் கதவோரத்தில் நின்றுகொண்டிருந்தார் கதவை திறக்கும்போது கதவிடையில் சிக்கிக் கொண்டார். கதவிடையில் சிக்கிக் கொண்டேன் கதவைத் திறந்து மூடுங்கள் என்கிறார் உடனே கண்டக்டர் சொன்னார்.....ஏன் ஐயா இந்த பேருந்தில் ஏறுகிறீர்கள் கதவிடையில் ஏன் நிற்கிறீர்கள் ஏன் கூட்டமுள்ள பேருந்தில் ஏறினீர்கள்....//
ஏன் ஐயா ஒருவர் சிக்கிக் கொண்டால் அவர் தவறு செய்த்தாகவே இருக்கட்டுமே அவரை விடுவித்த பின்பு சொன்னால் என்னவாம். அவரைத் திட்டியபடியே இருந்தார் கண்டக்டர் ஒரு நிமிடத்திற்குப் பின்பே ஓட்டுனர் கதவைத் திறந்தார்.

3.
மாலையில் மீண்டும் தாம்பரம் - பள்ளிக்கரனணை வேறொரு பேருந்து...மீண்டும் கூட்டம். இந்த முறை.... ஒரு பையன் 12-14 வயது இருக்கும்...பேருந்தில் இரண்டு கதவுகளுக்கு இடையில் அவன் பாதம் சிக்கிக் கொண்டது வலியில் துடித்தபடி கண்டக்டரிடம் கதவை சாத்தச் சொல்கிறான்.. அவர் காதிலேயே வாங்காமல் சீட் Fill up செய்துகொண்டிருந்தார்....பையன் மிகவும் அமைதியானவன் போல ஆனால் வலிதாங்க முடியாமல் கண்டக்டரிடம் கத்துகிறான்.....கண்டக்டர் அதே வார்த்தைகளை தான் சொன்னார் "ஏம்ப்பா இதுல ஏற்ன" சத்தியம்மக எனக்குப் புரியவில்லை....இவர் வீட்டில் இப்படி ஒரு மகன் இருக்கக் கூடுமல்லவா? இந்தப் பையனைப் பார்த்தால் அவன் நினைவு வரவேண்டுமல்லவா?? மீண்டும் ஏதோ கண்டக்டர் எழுத ஆரம்பித்துவிட்டார்......பக்கத்திலிருந்து எல்லோரும் கூச்சல் இடுகிறார்கள் கண்டக்டர் காதில் விழவேயில்லை....கடைசியாக (நடு ரோட்டில் இருக்கும் ஏருமை மாட்டை துரத்தினால் அது அசைந்தெ கொடுக்காது எதையாவது எடுத்து அடித்தால் அது மிக மெல்லமாக அசைந்து சாவகாசமாக நடக்குமே அதுபோல) ஓட்டுனரிடம் பவ்வியம்மாக கதவை மூடித் திறக்கச் சொன்னார்.... ஓட்டுனரும் அசைந்து கொடுக்கவில்லை...கடைசியாக பேருந்தில் இருந்த எல்லோரும் கூச்சல் இட்டு     ஓட்டுனரை கதவை மூடித்திறக்கச் சொன்னோம்....இதற்கிடையில் நான்கு பேர்  மிக வலுவாக அந்த கதவை தள்ளி பையனுக்கு வலிக்காமல் இருக்க முயற்ச்சித்தார்கள். நம்பினால் நம்புங்கள் அடுத்த நிறுத்த்தில் தான் ஓட்டுனர் கதவைத் திறந்து மூடினார்....ஒரு 3 நிமிடம் அந்த பையன் என்ன அவதிக்கு ஆளாயிருப்பான்......

பையன் கீழே விழுந்தால் வேலை போய்விடும் ஆனால் கையோ காலோ நசுங்கினால் யாரும் ஏதும் கேட்கமாட்டார்கள் தானே........பேருந்துகள் என்று இல்லை...அரசாங்கத்தில் எல்லா துறைகளிலும் இதே நிலைதான்....ஓரிருவரே விதிவிலக்கு போல் இருக்கிறார்கள்.....

அடுத்த நாள் மவுன்ட் ரோட் போக வேண்டும் பேருந்து மாற்றி ஏறிவிட்டேன் அடுத்த நிறுத்ததில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்து ப்ராட்வே செல்லும் பெருந்தில் ஏறச்சொன்னார் ஒருவர். இறங்கியவுடன் ஒரு ப்ரட்வே பேருந்து  சென்றது பின்னாலே ஓடிச் சென்று ஏறிவிட வேண்டியது என்று பின்னாடியே ஓடினேன் ஆனால் மயிரிழையில் தவறவிட்டேன். பின்னும் வந்த வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கையில் என்னை அனைத்தபடி ஒரு பைக் வந்து நின்றது. பைக்கில் இருந்தவாறே ஒருவர் "ஏறுப்பா சீக்கிரம்" என்றார்...ஒன்றும் யோசிக்காமல் ஏறினேன்....நான் அந்தப் பேருந்தில் ஏற முயன்றதை அவர் கவனித்திருக்க வேண்டும். நானும் பைக்கில் ஏறினேன்........எங்கே என்றார் மவுன்ட் ரோட் என்றேன். நான் அந்த வழியில் தான் போகிறேன் இறக்கிவிடுகிறேன் என்றார்.அவரைப் பற்றிக் கேட்டேன் ஒரு கடை வைத்திருக்கிறேன் என்றார். பின் எங்கே செல்கிறேன் என்று கேட்டார் கம்பேனி முகவரியைச் சொன்னதும்.......அந்த இடத்துக்கே வந்து என்னை இறக்கிவிட்டுச் சென்றார் அவர் முகத்தைக் கூட நான் சரியாகப் பார்க்கவில்லை......இப்படியும் மனிதர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்


தயவுசெய்து மாணவர்களுக்கு படிப்பைச் சொல்லித் தரும் முன் அன்பையும் பண்பையும் சொல்லிக் கொடுங்கள் அடுத்தவர் துன்பத்தில் இருந்தால் அவருக்கு இயன்ற உதவி செய்யவேண்டுமென்ற உணர்வை ஊட்டுங்கள். அப்புறம் என்ன எழவையோ சொல்லிக் கொடுங்கள். வெறும் கல்வி மட்டும் கற்றதனால் தனே இந்த சீரழிவு

அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை.

பிறர் துன்பத்தை தன் துன்பமாகக் கருதத் தெரியாத அறிவு என்ன மயித்துக்கு? என்று கேட்கிறார் வள்ளுவர்.....

No comments:

Post a Comment