மூத்தவங்க வெள்ளாம பாத்துவந்த பூமியத்தா
காத்துவந்து பரம்பரயா வெவசாயஞ்
செய்யுறோம்.
நேத்துவந்த ஒருபயதா சாத்தானப் போலவந்து
மீத்தேனு எடுக்கனுமுனு வயக்காட்ட
கேக்குரான்
ஆத்தாடி இதுஎன்ன கூத்துன்னு கேக்கையில
மீத்தேனு வரலாத்த படிச்சவுக சொன்னாக
சோலெயெல்லாம் அழிச்சுப்புட்டு இருக்கு
எங்கவயல்களையும்
பாலைவனம் ஆக்கதுக்குல கொடும்பாவி
துடிக்கிறான்
வயலுக்குள்ள கொழாப்போட்டு உயிரெயெல்லா
உரிஞ்சுபுட்டா
பயிருபட்ட வளக்கதுக்கு தண்ணிக்கெங்க
போறதா?
காத்திருந்தவென் பொண்டாட்டிய
நேத்துவந்தவெ சேத்ததாட்டம்
காத்துவெச்ச பூமியத்தா வேத்தொருத்தேஞ்
சொரண்டுவதா?
இத்தனையும் எடுத்துச்சொல்லிப் போராடித்
தடவிதிச்சா
அத்தனையும் எதுத்துக்கிட்டு அரசாங்கத்
தடையமீறி
ஆத்தாளின் அடிவயித்துல கம்பிவிட்டுப்
பாக்கதுக்கு
கோர்த்தாரின் ஆடரோட வாராண்டி பாவிமவெ
அறிவுகெட்ட பயஅவன அடிச்சுநாம
வெரட்டிப்புட்டு
பரிகொடுத்த வளத்தையெல்லா பாதுக்காக்க
வேணுமம்மா!
பசுமைக்காக நீங்கசெஞ்ச பச்சகலரு
புரச்சியால
கொடுக்குந்தாயிப் பாலில்கூட நஞ்சுவந்து
கலந்ததே
வெஷந்தெளிச்சி பயிர்வளக்க சொல்லித்தந்த
பதருகளே
வெஷத்தால அழிஞ்சதுவோ பூச்சியில்ல
நாங்கதா
நஞ்சுவுள்ள உரத்தையெல்லா தூக்கிநாம
வீசிப்புட்டு
எஞ்சியுள்ள நிலத்தையாச்சும் இயற்கையான
முறையில
வெள்ளாம செஞ்சுநாம மகசூலப் பெருக்கனும்
எல்லாரும் இதுக்குஒங்க ஆதரவ
கொடுக்கனும்......
No comments:
Post a Comment