Monday, May 5, 2014

மோட்சம்

'இது என்னுடையது' எனப்
பொருள்படும்படி
குழந்தை
தன் பிஞ்சுக் கரங்களால்
இறுகப் பற்றியதால்
உயிர்த்து பொம்மையின்
'நான்'

குழந்தையின் கையில்
எப்போதும் இருக்க
ஏங்கியபோது
பொம்மைக்குப் பிறந்தது
ஆசை

குழந்தை இறுக
அனைத்துத் தந்த
முத்தங்களில்
பொம்மை உணர்ந்தது
காமம்.

ஒரு நாள்
குழந்தை பொம்மையை
வீசி எரிந்தபோது
பொம்மை மேற்கொண்டது
துறவு.

தற்செயலாகக்
குழந்தையின் கைகளிலிருந்து
தன்முனைப்பின்றி
நழுவி விழுந்தபோது
பொம்மை அடைந்தது
மோட்சம்.


-யாழ்

No comments:

Post a Comment