P. J.உதுமான் மைதின் என்பவர் எனது பள்ளி கணித ஆசிரியர்.. கணிதம் மட்டுமின்றி தமிழிலக்கணம் அறிவியல் முதலாக தனிப்பட்ட வாழ்க்கையிலும் எனது ஆசான்.. பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் அவரைச் சந்தித்தேன்.. என்னைப் பற்றியும் எனது குடும்பம் பற்றியும் விசாரித்தார்.. அண்ணனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தெரிவித்தேன்.. மாதங்கள் கழித்து எனது அண்ணன் திருமணத்திற்கு பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அழைப்பு கொடுத்தோம். பலமுறை முயன்றும் அவரைச் சந்திக்க முடியாததால் அவருக்கு மட்டும் அழைப்பு வைக்கமுடியவில்லை.. நானும் மறந்து போனேன். திருமணத்திற்கு அனைத்து ஆசிரியர்களும் வருகை தந்தனர்.. அவர் மட்டும் வராததை அறிந்த எனது அம்மா அழைப்பு வைக்காததால் என்னைத் திட்டினார்.. அன்று மாலை பள்ளியில் திருமணம் பற்றி மற்ற ஆசிரியர்கள் பேசுவதைக் கேட்டுதான் அவருக்கு திருமணம் பற்றிய செய்தி தெரிந்திருக்கிறது.. மாலை திருமண வரவேற்பில் கையில் மொய் கவருடன் வந்து நின்றார்.. எப்படிப்பட்ட மனிதராக இருப்பார் என்று ஒரு நொடி திகைத்துப் போனேன்.. எனது அம்மா வெடவெடத்துப் போனார்.. எனது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக இன்றும் அதைக் கருதுகிறேன்
No comments:
Post a Comment