Monday, November 2, 2015

கற்பன பண்ணவேண்டியதுதான் அதுக்காண்டி இப்பிடியா

கற்பன பண்ணவேண்டியதுதான் அதுக்காண்டி இப்பிடியா 

தன்னை நிந்தைசெய் வெண்நகை மேல்பழி சார
மன்னி ஆங்கது நிகர்அற வாழ்மனை வாய்தன்
முன்இ றந்திடு வேன்என ஞான்றுகொள் முறைமை
என்ன வெண்மணி மூக்கணி ஒருத்திநின் றிட்டாள்

- சிவப்பிரகாசர் 

பற்களுக்கு முத்துக்களை உவமை சொல்வது மரபு. ஒருத்தியின் பல்வரிசை முத்தைவிடவும் அழகாக இருந்ததாம். இதனால் அவமானமடைந்த முத்து ஒன்று அவளை (அவளின் பற்களை) பழிவாங்க அதன் வீட்டின் முன் தற்கொலை செய்தால் அந்தப் பழி பல்மேல் வரும் எனஎண்ணி பல்வாழும் வீட்டு வாசலான வாய்க்கு எதிரே தூக்குப் போட்டு தொங்கிவிட்டதாம். அந்த நகைதான் புல்லாக்கு என்ற மூக்கு நகையாம்.

தன்னைக் களங்கப்படுத்திய  பற்கள் (வெண்நகை) மேலே பழி வந்து சேரட்டும் என்று அப்படி களங்கப்படுத்தியதற்கு பழிக்குப்பழி வாங்கவும் (நிகர்அற) பல்வாழும் வீடாகிய வாய்க்குமுன் போய் இறந்துவிடுவேன் என்று சொல்லி தூக்கில் தொங்கியதுபோல் (ஞான்று - தொங்கு)  இருக்கும் மூக்கு அணியை ஒருத்தி அணிவித்தாள்.

No comments:

Post a Comment