Monday, July 25, 2016

தமிழா

"திராவிட" என்பது மூலச்சொல் அல்ல. அது தமிழ் என்பதன் சமஸ்கிருதப்படுத்தப்பட்ட சொல்லாகும்.

தமிழா என்பதே மூலச்சொல். தமிழா சமஸ்கிருதத்தில் திராவிட ஆனது.

**(English எப்படி தமிழ்ப்படுத்தப்பட்டபோது 'ஆங்கிலம்' ஆனதோ அப்படி)

திராவிட எனும் சொல் ஒரு மொழியின் பெயரே அன்றி அம்மொழிபேசும் மக்களின் இனத்தைக் குறிக்கும் பெயரல்ல. இங்கே நினைவில் கொள்ளவேண்டியது தமிழ் (அ) திராவிட என்னும் மொழி வெறும் தென்னிந்தியாவில் மட்டும் பேசப்பட்ட மொழியல்ல, ஆனால் ஆரியர்கள் வருகைக்கு முன்பு காஷ்மீரத்திலிருந்து குமரிமுனை வரை இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி.

உண்மையில் இது இந்தியா முழுவதிலும் இருந்த நாகர்களின் மொழியாகும்.

இதில் கவனிக்கவேண்டிய அடுத்த விஷயம், 'நாகர் - ஆரிய' தொடர்பினால் நாகர்கள் மற்றும் அவர்களின் மொழியின் மீது ஏற்பட்ட தாக்கம். ஆனால் இத்தொடர்பினால் ஏற்பட்ட விளைவானது வினோதமாக வடஇந்திய நாகர்களிடம் ஒருவிதத்திலும் தென்னிந்திய நாகர்களிடன் வேறுவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடஇந்திய நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை விடுத்து சம்ஸ்கிருதத்தை ஏற்றனர்.

தென்னிந்தியா நாகர்களோ ஆரியர்களின் சம்ஸ்கிருத்தத்தை ஏற்காது தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்தனர்.

இந்த வேறுபாட்டைப் பற்றி கொஞ்சம் சிந்தித்தால் 'திராவிட' என்ற சொல் ஏன் தென்னிந்தியர்களை மட்டும் குறிக்கிறதென்பது விளங்கும்.

வடஇந்திய நாகர்களை 'திராவிட' என்று குறிப்பிடுவதின் தேவை அவர்கள் திராவிட மொழியைத் துறந்ததிலிருந்து மறைந்தது.

ஆனால் தென்னிந்திய நாகர்களே 'திராவிட' என்று அழைப்பதற்குறிய ஒரே மக்கள் என ஆகாதமட்டும் திராவிட என்ற சொல் திராவிட மொழியை மட்டுமே குறித்துவந்துள்ளது. அனால் எப்பொழுது வடஇந்திய நாகர்கள் திராவிட மொழி பேசுவதைக் கைவிட்டரகளோ உடனேயே அவர்கள் பார்வையில் திராவிட மொழிபேசும் ஒரே மக்களாக தென்னிந்திய நாகர்கள் வந்தபோதுதான் அதற்கானதேவை ஏற்பட்டது

இதுவே தென்னிந்தியர்கள் "திராவிடர்கள்" என்று அழைக்கப்படுவதற்கு உண்மையான காரணமாகும்.

Selected work of Dr BR Ambedkar” நூலிலிருந்து .

No comments:

Post a Comment