"Do you think I'm a bitch?"
கேட்டுவிட்டு அவன் முகத்தைக் காணப் பிடிக்காதவளாய் பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டவள் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு பார்வையை மீண்டும் அவனை நோக்கித் திருப்பினாள். கோபத்தில் சிவந்திருந்த அவளது கண்களில் ததும்பியிருந்த கண்ணீரின் பரப்புஇழுவிசை (Surface tension) புவியீர்ப்பு விசையோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தது.
அவன் பதிலேதும் பேசவில்லை.
"என்னைப் பத்தி என்ன நெனக்கிற அகில்? எனக்குப் புரியல"
அவன் பதில் பேச விரும்பவில்லை. அவனால் அவளது கண்களைப் பார்க்க இயலவில்லை. தனது பதில் தவறாக இருந்துவிடக் கூடாது என்பதில் முடிந்த அளவு தெளிவாய் இருந்தான். நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தான்.
"நீ பாஸ்வேர்ட் கொடுத்தப்ப என்கிட்ட நீ எந்த ஔிவுமறைவும் இல்லாம இருக்குறனு நெனச்சேன். அதான் சும்மா ஓபன் பண்ணி பாத்தேன். அந்த மெயில் கண்ல பட்டுச்சு. நான் எதையும் வேணும்னு பண்ணல. அந்தத் தேவையும் எனக்கு இல்ல"
"என்னை சந்தேகப்படுறீயா? எனக்கு பயமா இருக்கு. இப்படியே இருந்தா பின்னாடி நம்ம வாழ்க்கை நரகமாயிடுமோனு"
"நீ பயப்பட வேண்டியது இல்ல. நான் அந்த அளவு மோசமானவனும் இல்ல. நீ அவனோட பேசுறது இல்லனு சொன்ன. இப்ப இத பாக்குறப்ப எப்படி ரியாக்ட் பண்றதுனே தெரியல"
"பயம், அகில்! எனக்கு உன்னை நெனச்சாவே பயமா இருக்கு. அவனோட இவ்ளோ நாள் நல்ல ஃபிரண்டா இருந்துட்டேன். இப்போ நீ திடீர்னு பேசாதனு சொன்னா டக்குனு அப்படியே விட்டுற முடியல. உன் கோபத்த நெனச்சாலும் பயமா இருக்கு. அதான் சொல்லல"

"பயத்தோட நீ என்னோட இருக்க வேணாம். உனக்கு தோனுறத பண்ணிக்க. நான் உன்ன ரெஸ்ட்ரிக்ட் பண்ணியிருக்கக் கூடாது. இப்படி மறைக்குற அளவுக்கு போவனு நான் நெனச்சுக்கூட பாக்கல. அப்படி போவனு தெரிஞ்சிருந்தா ரெஸ்ட்ரிக்ட் பண்ணியிருக்கவே மாட்டேன்", பேசிக் கொண்டே அவளது கண்களுக்குப் பார்வையைத் திருப்பினான்.
"இப்படி எவ்ளோ நாள் மறைக்க முடியும்னு நெனச்ச?", கேள்வியை அவளது கண்களில் வைத்தான்.
அவனது பார்வையைத் தவிர்க்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"அதப் பத்தி எல்லாம் நான் யோசிக்கல. உன்கிட்ட மறைக்கணும்னு எல்லாம் பண்ணல. சொன்னா பிரச்சினை வரும்னுதான் சொல்லல. Priority changes over time. அவனுக்கும் அப்படி ப்ரையாரிட்டி மாறிட்ட அப்றோ அவனே என்கிட்ட பேசமாட்டான். ஆனா அவன்கிட்ட பேசாம என்னால அவன அவாய்ட் பண்ண முடியல."
"அத நீ முதல்லயே சொல்லியிருக்கலாமே? நீ மறைக்கல; பேசுறதே இல்லனு பொய் சொன்ன. புதுசா டிரஸ் வாங்கியிருக்கேன்னு எனக்கு ஃபோட்டோ அனுப்பினப்ப எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா? அத அவனுக்கும் அனுப்பி இருக்கனு தெரிஞ்சதும் நொந்துட்டேன்"
"ப்ளீஸ். நீ இப்படி எல்லாம் பேசுறப்ப எனக்கு எப்படி இருக்கும்னு நெனச்சுப் பாரு. I feel worse."
உள்ளே சென்ற அவளது குரலை மீட்டெடுத்து பேச்சைத் தொடர்ந்தாள்.
"நான் இப்படித்தான், அகில்! இத்தனை வருஷம் என்னோட இருந்தவன அப்படியே ஒரே நிமிஷத்துல தூக்கி வீசிற முடியாது. புரிஞ்சுக்க."
"அப்போ என்னை விட்ரு, சௌமி! நான்தான் உனக்கு ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டியா இருக்கணும்னு நெனக்கிறேன். தப்பா?"
"ப்ளீஸ்! புரிஞ்சுக்கோ. நீ வேற; அவன் வேற. உனக்குதான் எப்பயும் ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி. ஆனா அவனும் நம்மளோட இருக்கணும்னு நெனக்கிறேன். I want you people to be friends", அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன.
"அது நடக்காது. அவன எனக்குப் பிடிக்கல"
"ஏன் அகில்? எதுனால"
"உன்னால தான்", என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தான். யாரும் பார்த்துவிடக் கூடாதென்று சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அநேகரின் பார்வையும் அவள்மீதுதான் இருந்தது.
தொடரும்...
No comments:
Post a Comment