Sunday, May 7, 2017

ரேண்டம்-2

"Do you think lust dominates our love?"

வழக்கம்போல(!) அவளது இந்தக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளது இடுப்பில் வைத்திருந்த கையை விடுவித்தான்.

"இதுக்காக சொல்லல. பொதுவா கேக்குறேன். நாம இப்ப எல்லாம் அதிகமா இதப் பத்தி பேசுற மாதிரி இருக்கு"

"அதிகமா'ன்னா என்ன சொல்ற? பொதுவா எல்லாருக்கும் தன்னோட பார்ட்னரா வரப் போறவங்களப் பத்தி பயலாஜிக்கலா தெரிஞ்சுக்கணும்னு ஒரு கியூரியாசிட்டி இருக்கும். நமக்கும் அப்படித்தான்"

"ஆனா... Is it right?"

"இங்க தப்பு, சரினு இல்ல. சும்மா எதையாவது பேசிட்டு இருக்காத"

"ம்ம்ம். சரி! ஆனா ஏதோ உறுத்திட்டே இருக்கு"

"It is because of the conflict between your Id and superego"

"ஃப்ராய்ட்?"

"ஆமா"

"போடா நாயே!"

"மேகம் கொட்டட்டும்.. ஆட்டம் உண்டு' பாடல் ஒலிக்கத் துவங்கியதும் கூடியிருந்தவர்களின் சத்தத்தில் ஷாப்பிங் மால் அதிர்ந்தது. மேடையில் இருப்பவர்கள் நடன அசைவுகளை உதிர்க்க, கீழே கூடியிருந்தவர்கள் அவற்றைப் பிடித்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர்.

"எனக்கும் ஆடணும் போல இருக்கு"

"போய் ஆடு"

"வேணாம். ஒரு மாதிரி இருக்கும். கமல் பாட்டுல இது?"

"ஆமா"

"என்னதான் கமல் வெஸ்டர்ன் கல்ச்சர் ஃபாலோ பண்ணாலும் இப்படி பண்றது நல்லா இல்ல. Kamal and Sarika could have been together"

"ஏன்? இப்ப என்ன ஆச்சு"

"கமலோட பொண்ணுங்கள வெஸ்டர்ன் கல்ச்சர்ல வளர்க்கலாம். ஆனா அவங்க முன்னாடியே இன்னொரு பொண்ணோட வாழ்றது நல்லா இல்ல"

இதான் நம்ம பிரச்சினை. கமல் யாரோட இருக்கணும். நயன்தாரா யாரோட இருக்கணும்னு ஈசியா சொல்லிருவோம். ஆனா நாம யாரோட வாழனும்னு நம்மலாள டிசைட் பண்ண முடியாது. கேட்டா மெச்சூரிட்டி இல்ல. அப்பா-அம்மா பாத்துப்பாங்கனு கடைசி வரைக்கும் சொல்லிட்டு இருப்போம்."

"சரி விடு. வா! உனக்கு ஷர்ட் எடுக்கலாம்"

"ஏன்?"

"இந்த ஷர்ட் நல்லா இல்ல"

"ஏன் இதுக்கு என்ன?"

"தாத்தா மாதிரி இருக்கு. உனக்கு டிரஸ்ஸிங் சென்ஸே இல்ல. உன் வயசு பசங்க எல்லாம் எப்படி டிரஸ் பண்றாங்கனு பாரு"

அவனிடம் சொல்ல ஏதும் இல்லை. அவளுடன் நடந்தான்.

பெண் ஒருவர் ஷாப்பிங் செய்த பைகளை வைத்துக் கொண்டு முன்னால் நடக்க, அவரது கணவர் கைக்குழந்தையை முன்னால் கட்டிக் கொண்டு பின்னால் நடந்து செல்கிறார்.

"இதே மாதிரி நான் ஷாப்பிங் பண்றப்ப நீயும் இப்படி நம்ம குழந்தைய வச்சுகிட்டு வருவியா?"

தனது கையில் இருக்கும் அவளது ஹேண்ட் பேக்கைக் காண்பித்து, "இதுக்கே என்னை எல்லாரும் henpecked சொல்றானுங்க. இதுல இது வேறயா?"

"எவன் என்ன சொன்னா உனக்கன்ன? நாளைக்கு உனக்கு ஏதாவது ஒன்னுனா அவனா வந்து பார்க்கப் போறான். சொல்லிட்டு அவனுங்க வேலைய பாத்துட்டு போய்டுவானுங்க"

"எனக்கு ஒன்னும் இல்ல. நான் பண்ண மாட்டேன்னு சொல்லலியே"

***

ஏழெட்டு சட்டைகளை எடுத்துக் காண்பித்து, "எல்லாத்தையும் போட்டுக் காட்டு", என்றாள்.

"போ! எல்லாத்தையும் எல்லாம் போட்டுக் காமிக்க முடியாது. ஏதாவது ரெண்டு டிசைட் பண்ணி சொல்லு. போட்டுக் காமிக்கிறேன்"

அவளும் எடுத்துக் கொடுத்தாள்.

"எப்படியும் நீ எடுக்குற சட்டை உனக்கு நல்லா இருக்காது. பேசாம உன் ரூம் மேட்டுக்கு ஒரு சட்டை எடுத்துட்டுப் போ. வழக்கம்போல அவன் சட்டை எதையாவது நீ எடுத்துக்க"

"அதுவும் சரிதான்"

இரண்டில் ஒன்றை அவள் தேர்வு செய்ய, "இதையே போட்டுக்க. நீ போட்டுட்டு வந்தத பேக்ல வச்சுக்க", என்றாள். அவ்வாறே செய்தான்.

***

ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவள் எதையோ நினைத்துக் கொண்டிருந்தாள்.

"ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன ஆச்சு?"

"ஒன்னும் இல்ல"

"ஒழுங்கா சொல்லு"

"ஒரு ஐஸ்கிரீம் கடைக்காரன்'கிட்ட பேசுறதுக்கு யோசிக்கிற. அந்த அளவுக்குக்கூட கான்ஃபிடன்ஸ் இல்லையா?"

"எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு எல்லாம் பழக்கம் இல்ல. தப்பா ஏதாவது சொல்லி அவன் சிரிச்சுட்டா நல்லா இருக்காது. அதான் உன்னையே ஆர்டர் பண்ண சொன்னேன்.

"அப்படி இருக்காத. தெரியலனா தெரிஞ்சுக்க. நான் உன்னை டிபன்ட் பண்ணி இருக்கணும். நீ என்னையே எல்லாத்துக்கும் பார்த்துட்டு இருக்கக் கூடாது"

"சரி"


தொடரும்...

No comments:

Post a Comment