எல்லியட்ஸ் கடற்கரை. மேற்கில் சூரியன் தாழ்ந்து, கிழக்கில் கடலும் வானும் சந்திக்கும் தொடுவானத்திலிருந்து கடலையும் நிலத்தையும் இருட்போர்வை போர்த்திக்கொண்டிருந்தது. வெகுசொற்பமான மக்கள் கூட்டம். ஒரு குழந்தையைப் போல் பயத்தோடும் பரவசத்தோடும் அலைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். அவனோ மணலில் அமர்ந்து அவள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'நீயும் வா!', என்பதாக சைகையில் அவனை அழைத்தாள்.
தயக்கத்தோடு எழுந்து அருகில் சென்றான்.
நேரம் ஆகஆக அலைகளின் வேகம் அதிகமாயின. அவனது கைகளைப் பிடித்துக் கொண்டாள். திரும்பி அவளைப் பார்த்தான். அவளது கவனம் முழுவதும் அலைகளின் மீது இருந்தது. சலிக்கவில்லை;மாறாக நேரமாகிவிட்டதே என்கிற வருத்தம் அவளுக்கு.
லேசான தூறலில் ஆரம்பித்து பெரிய மழையானது. கடற்கறையில் இருந்தவர்கள் யாவரும் அடைத்திருந்த கடைகளில் தஞ்சம் அடைந்தனர். பாதி நனைந்த இவர்களும் ஒரு கடையில்.
"நம்ம நேரம். நல்லா மாட்டிகிட்டோம்",வருத்தத்தைவிட பயம் அவளுக்கு.
"நின்னுடும்".
மழையின் வேகம் அதிகமானது. அவனது கைகளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அவன்மீது சாய்ந்து கொண்டாள். அவனது இதயத்துடிப்பின் வேகம் அதிகரிப்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். ஒற்றைக் கையில் முழுவதுமாக அவளை அணைத்துக் கொண்டான். அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. திரும்பி அவனது கண்களைப் பார்த்தாள். சலனமில்லாமல் பார்வையைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். அவளது மழையின் மீதான பயம் காணாமல் போனது. மாறாக மேலும் தொடர வேண்டினாள்.
" Who are we?", அவனது கைகளை விலக்கிவிட்டு அமைதியை உடைத்தாள்.
"Do you want to define?"
"Yes. If it is just friendship, these things are definitely wrong"
அவன் பதில் சொல்ல விரும்பவில்லை.
மழை நின்றிருந்தது. பைக் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினர். அவனை விட்டு விலகியே நடந்தாள்.
"நான் சீக்கிரம் இங்க இருந்து போயிடுவேனு நெனக்கிறேன்", பேச்சைத் தொடர்ந்தாள்.
"ஏன்"
"சரினு படல"
"ஏன்? என்ன ஆச்சு"
"I have always been in a shell. I never tried to come out of that. உன்ன பிடிச்சுருக்கு. ஆனா இதெல்லாம் நடக்காதுனு தோனுது"
அவன் பேசவில்லை.
"உன்னோட இருக்கணும்னு தோனுது. உன்ன பிடிச்சுருக்கு. ஆனா எல்லாத்தையும் நெனச்சா பயமா இருக்கு. I'm a coward"
"எதுக்கு இப்ப இப்படி பேசுற?"
"நாம இப்படி நம்ம ரிலேஷன்ஷிப்ப டிஃபைன் பண்ணிக்காம இருக்குறது சரியா படல"
அமைதியாக நடந்தான்.
"சொல்லு. who are we? Lovers???"
"இல்ல"
சற்றே அதிர்ந்துபோனாள்.
"அப்றோ?", உடைந்துபோன குரலில்.
"Soulmates"
அதற்குமேல் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. பைக்கில் ஏறி அமைதியாக அமர்ந்தாள். சாப்பிட ஒரு ஹோட்டலில் நிறுத்தினான். அவளுக்கு சாப்பிட மனமில்லை. அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"எப்படி இப்படி எதுவுமே நடக்காத மாதிரி சாப்பிட்டு இருக்க?", கோபத்தைக் காட்டிக் கொள்ளாமல் தன்மையாகக் கேட்டாள்.
"எனக்கு இதெல்லாம் சரிபட்டு வரும்னு தோனல"
"எத சொல்ற?"
"இந்த லவ், கல்யாணம் எல்லாம்."
"ஏன்'டா அப்படி சொல்ற?"
"உன்னால என்னோட எப்பயும் இதே மாதிரி இருக்க முடியாது"
"இருந்துப்பேன்'டா"
"முடியாது. என்னைப் பத்தி எனக்கு தெரியும். என்னால Trial and error-ல லவ் பண்ண முடியாது. நான் இப்படித்தான்.
தொடரும்...

No comments:
Post a Comment