Sunday, May 7, 2017

ரேண்டம்-4

"வர லேட் ஆகும்னு சொன்ன?", டிவியை ஆன் செய்துவி்ட்டு ரிமோட்டை அவனிடம் கொடுத்தாள்.

டிசம்பர் மாத இறுதி. முன்னிரவு நேரம். திறந்திருந்த ஜன்னலின் வழியே குளிர் அறையெங்கும் பரவியிருந்தது. குளிரைக் காரணம் காட்டி மின்விசிறி குறைந்த வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது.

பாடல் கேட்கும் மும்முரத்தில் மியூசிக் சேனலைத் தேடிக் கொண்டிருந்தான்.

"உன்கிட்டதான் கேட்டேன்", குதிரை வாலைக் கோதி எடுத்து க்ளிப் போட்டுக் கொண்டாள்.

"என்ன?"

"லேட்டாகும். வர முடியாதுனு சொன்ன. இப்ப வந்துட்ட?"

"கடுப்பாகுது. இவங்க குடுக்குற சம்பளத்துக்கு எவ்ளோ தான் வேலை பாக்குறது. கிளம்பிட்டேன்"

"மேனேஜர் இருக்க சொன்னாருனு சொன்ன. அவர் ஏதும் சொல்லலையா?"

"இருக்க சொன்னார். மாட்டேனுட்டேன்"

"ஏதும் பிரச்சினை இல்லையா?"

"பின்ன என்ன? பேச்சிலர்தான லேட்டா போனா என்னனு கேட்டாரு. 'பேச்சிலர் பையன்னா ஜட்டி போடாம வந்தா பரவாயில்லையா?'னு கேட்டேன். 'ஜட்டி, பனியன் துவைச்சு ஒருவாரம் ஆச்சு',னு சொன்னேன். ஏதும் சொல்லல. கிளம்பிட்டேன்"

"வாய் நீளம்டா உனக்கு. சரி. டீ... காஃபி.. என்ன வேணும்?", சமையலறையை நோக்கி நடந்தாள்.

"காஃபி".

'நான் தேடும் செவ்வந்திப் பூ இது', பாடல் ஓடிக் கொண்டிருந்தது. களைப்பில் ஷோஃபாவில் கண்மூடி சாய்ந்திருந்தான்.

இரண்டு கைகளிலும் காஃபி கப்களுடன் அவனருகில் வந்தமர்ந்தாள். காஃபி குடித்தபடியே உரையாடல் தொடர்ந்தது.

"உன் ரூம்மேட்ஸ் எங்க?"

"ஈவ்னிங் ஷிப்ட் ஒருத்திக்கு. இன்னொருத்தி ஊருக்கு போயிருக்கா"

"வாடகை எவ்ளோ இந்த வீட்டுக்கு?"

"தெர்ட்டீன். மூனு பேருக்கு காஸ்ட்லி தான். ஃபுல்லி ஃபர்னிஷ்ட். அதான் பரவாயில்லைனு கன்வின்ஸ் ஆயிட்டோம்"

அரசியல், சினிமா, கிரிக்கெட் என்று சுற்றி, இருவரும் தங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தனர். இருவருக்குமான தொலைவும் குறைந்து கொண்டே வந்து கடைசியாக அவனது தோளில் சாய்ந்து இருந்தாள். அவனது கையை அவளது கன்னத்தில் வைத்துக் கொண்டான். 'எங்கே.. எடுத்துவிடுவானோ?', என்று அவளது கையை கன்னத்திலிருந்த அவனது கைமேல் வைத்துக் கொண்டாள்.

"ஆஃபிஸ்ல பசங்க எப்படி? டீம்ல ஒரே பொண்ணு. கண்டிப்பா எவனாவது ஏதாவது பண்ணியிருக்கணுமே"

"எல்லா டைப் பசங்களும் இருக்கானுங்க. என்னோட வொர்க் பண்ற ஒருத்தர்.. மேரிட்.. முப்பத்து அஞ்சு வயசு இருக்கும். அப்பப்ப வாட்ஸ் அப்ல பிங் பண்ணுவான். சும்மா.. என்ன பண்ற? உனக்கு என்ன இன்டரெஸ்ட்னு கேட்டுட்டு இருப்பான். ஒருநாள் லவ் பத்தி என்ன நெனக்கிற? லஸ்ட் பத்தி என்ன நெனக்கிற?னு கேட்டுட்டு அவனே சொல்ல ஆரம்பிச்சான். லவ் வயசு பாத்து வராது. யாருக்கும் யார் மேலயும் வரும்னு சொல்லிட்டு இருந்தான்"

"உனக்கு ஸ்கெட்ச் போட்டுருக்கான்"

"எங்களுக்கு தெரியாது பாரு. அப்றோ அவன ப்ளாக் பண்ணிட்டேன். நேர்ல பாத்தா கண்டுக்காம போய்டுவேன்"

"இப்படித்தான் எல்லா பொண்ணுங்ககிட்டயும் போட்டு பார்ப்பாங்க. லைட்டா தலை அசைச்சாலும் அட்வான்டேஜ் எடுத்துப்பானுங்க"

"எப்படித்தான் இப்படி எல்லாம் கூசாம பண்றானுகளோ?"

"உடனே இப்படி பேசாத. உனக்கு அவன் மேல இன்டரெஸ்ட் இல்ல. இருந்துச்சுனா வேற மாதிரி ரியாக்ட் பண்ணியிருப்ப"

"செருப்படி வாங்குவ நாயே!"

"அந்த ஆளுனு இல்ல. பொதுவா பசங்க அப்படித்தான். பாக்குற பொண்ணுங்ககிட்ட எல்லாம் போட்டு பார்ப்பாங்க. பொண்ணுங்களும் இன்டரெஸ்ட் இருந்தா அவன தூக்கி வச்சு பேசுவாங்க; இல்லனா அவன் அப்படி இப்படினு பேசுவாங்க."

"சரி விடு"

"லவ்வே அப்படித்தான? சிம்பத்தி, குட்டிக்கர்ணம், எமாஷனல் பிளாக்மெயில்னு எப்படி எப்படியோ ட்ரை பண்ணி லவ் ஓகே பண்ண வேண்டியது; அப்றோ எங்க காதல் புனிதம்னு ப்ரூவ் பண்ண ட்ரை பண்றது. யாருக்கு ப்ரூவ் பண்ணி என்ன ஆகப் போகுது?"

கழுத்தில் கை வைத்து அசைத்துக் கொடுத்தான்.

" வலிக்குதா? மடில வேணும்னா தலை வச்சு படுத்துக்கோ", என்றாள்.

அவளது மடியில் தலை வைத்துக் கொண்டான்.தலைமுடியை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

"இது என்னது?"

"ஷார்ட்ஸ்'டா"

"இப்படி இருக்கு"

"டிசைன் அப்படி. ஆமா.. டிரெஸ்ஸிங் பத்தி என்ன நெனக்குற"

"It should not arrest my degrees of freedom"

"அப்படின்னா?"

"கைய கால நீட்டுறதுக்கு இடைஞ்சலா இருக்க கூடாது. எங்க போனாலு புடிச்சுகிட்டே சுத்துற மாதிரி இருக்கக் கூடாது. ஜிகுஜிகுனு, பளிச்னு எல்லாம் இருக்கக் கூடாது. சிம்பிளா இருக்கணும்"

"என்ன கன்றாவி டேஸ்டோ? பொண்ணுங்க டிரஸ்ஸிங் பத்தி என்ன நெனக்குற?"

"அதப் பத்தி என்ன நெனக்குறது?"

"இல்ல. மாடர்ன் ட்ரஸ் பத்தி எல்லாம்"

"அது அவங்கவங்க இஷ்டம். அதுல என்ன சொல்றது?"

"கரெக்டா? தப்பா? உன்னோட வியூ என்ன?"

"இதுல கரெக்ட் தப்புனு என்ன இருக்கு? பொண்ணுங்க ஆரம்பத்துல சேரி கட்டுறப்ப இடுப்பு தெரியக்கூடாதுனு 'பின்' எல்லாம் போட்டு மறைப்பாங்க. கொஞ்ச காலம் போனா அப்படியே காத்து வாங்கும். அதே மாதிரிதான். கைய தூக்குறதுக்கு கூச்சமா இல்லன்னா, அடிக்கடி ஷேவ் பண்றது பிரச்சினை இல்லன்னா, ஷேவ் பண்ணாம இருந்தாலும் பிரச்சினை இல்லன்னா ஸ்லீவ்லெஸ் போட்டுக்கலாம்; க்ளீவேஜ் தெரியுறது பிரச்சினை இல்லைனா லோ-நெக் போட்டுக்கட்டும். It's all about their convenience."

"அது என்ன பிரச்சினை இல்லன்னா...?"

"அன்னிக்கு ஒருநாள் பஸ்ல போயிருந்தேன். நான் நின்னுட்டு இருந்தேன். ஒரு பொண்ணு சீட்ல உட்கார்ந்து இருந்துச்சு. லோ-நெக். தற்செயலா ஒரு செகண்ட் நான் பார்த்தத அந்தப் பொண்ணும் பாத்துடுச்சு. அப்றோ அந்தப் பொண்ணு இறங்குற வரைக்கும் கைய வச்சு மறைச்சுகிட்டே வந்துச்சு. நானும் பாக்காம இருக்க எங்க எங்கயோ தலைய திருப்பிகிட்டேன். பார்த்தா என்ன ஆயிடப் போகுதுனு நெனச்சு இருந்தா பிரச்சினை இல்ல. அப்படி பண்ணதால எனக்கு இன்சல்ட். நானும் அப்படி கில்ட் ஃபீலோட நிக்க வேண்டியதாயிடுச்சு. இதுவும் அந்த ஸேரி எக்ஸாம்பிள் மாதிரி தான். போகப் போக எல்லாருக்கும் பழகிடும். பட் இந்த ட்ரான்ஸாக்ஷன் பீரீயட்ல இப்படித்தான் இருக்கும்"

"அப்படின்னா ஃபியூச்சர்ல எவனும் தப்பா பார்க்க மாட்டான்னு சொல்றியா?"

"அப்படி எல்லாம் சொல்லிட முடியாது; பார்த்துப் பழகிட்டா இன்டரெஸ்ட் போயிடும்னு. அப்படி பாத்தா இத்தன வருஷத்துல போர்னோகிராபி மேல எல்லாருக்கும் இன்டரெஸ்ட் குறைஞ்சு இருக்கணும். கூடிட்டே தான் போகுது. இட்ஸ் நேச்சர். அப்படியே மாறாது;இருக்கும். பட் பாக்குற விதம் மாறும்"

"சரி போதும். என்ன சாப்பிடுற?"

"நீ சமைக்க வேணாம். ஆர்டர் பண்ணு"


தொடரும்...

No comments:

Post a Comment