சோடியம் விளக்கொளியில் பனிமூட்டத்தைக் காண்பதே தனியொரு அனுபவம். பூச்சிகள் விளக்கைச் சுற்றிவந்து விளக்கின் கண்ணாடியில் மாறிமாறி மோதிக் கொண்டிருந்தன. குளிருக்குத் தேநீர் அருந்த வேண்டும் போலிருந்தது இருவருக்கும்.
"டீ?", என்றான்.
விழியை உயர்த்திப் பார்த்து தலையைச் சிக்கனமாக அசைத்து சம்மதித்தாள்.
"இந்த டைம்ல கடை இருக்குமா?"
"இருக்கும். வா!"
பைக்கில் ஏறி அமர்ந்து அவளை அமரச் சொல்ல திரும்பிப் பார்த்தான்.
"எப்படி உட்காரட்டும்? ரெண்டு பக்கம் கால் போட்டா? ஒரு பக்கம் கால் போட்டா?"
"உன் இஷ்டம்"
அவன் பதிலில் திருப்தி அடையாதவளாய் ஒரு பக்கமாய் கால் வைத்தே அமர்ந்தாள்.
"ம்ம்ம். போ!"
வேகமாய் கியர் மாற்றி வண்டியைக் கிளப்பினான். நியூட்டனின் முதல்விதியை அவளுக்கு விளக்கிவிட்டு வண்டி நகர்ந்தது.
அமைதியைக் கலைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள். அவன் உணர்ந்துவிடாதபடி அவனது சட்டையை இரண்டு விரல்களின் நுனியால் பிடித்துக் கொண்டாள். அவனுக்குத் தெரியாமலில்லை. அவளது செய்கைகளை அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான். வேகத்தடைகளில் பிரேக் போடும் சமயங்களில் அவனது தோளில் ஒருகணம் பட்டும்படாதபடி முகம் சாய்த்து சட்டென எடுத்துக் கொள்வாள்.
"ஒழுங்காவே சாய்ஞ்சுக்கலாமே!"
"I don't think I have the rights to do so"
"அப்றோ ஏன் இப்படி?
"சரி. விடு"
டீக் கடை வந்தது. இறங்கி நின்றவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பைக்கை நிறுத்திவிட்டு இரண்டு பேருக்கும் டீ வாங்கி வந்தான்.
இரண்டு கைகளால் வாங்கிக் கொண்டாள். அவனைப் பார்த்துக் கொண்டிருந்த விழிகளைக் கீழிறக்காதவாறு இரண்டு கைகளால் கிளாஸை உதட்டருகே கொண்டு சென்று பறக்கும் ஆவியை மெதுவாக ஊதி சிலதுளிகள் அருந்தினாள்.
"ஏன் ரெண்டு கையால பிடிச்சுருக்க?"
"கான்ஃபிடன்ஸ் இல்ல. குளிருது வேற. ஷிவரிங்"
"ம்ம்ம். ரொம்ப யோசிக்கிற. நார்மலா இரு"
"You are a coward, Akil"
அவன் எதிர்பார்த்ததுதான். இருந்தும் அவன் பதிலைத் தயார் செய்து வைத்திருக்கவில்லை. அவளது கூற்றை அப்படியே கடந்துவிட எண்ணிணான்.
"I wanted to be the way you are. That's why I am here with you. I came out of my shell. Now, I am ready to do anything for you. But I don't know why you are silent even now"
"என்ன சொல்றதுனு தெரில. உனக்கு எப்படி புரிய வைக்கிறதுனும் தெரில"
"இததான் நீ ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்க. அப்படி என்னதான் பிரச்சினை வரும்னு நெனக்கிற"
"நீ என்னை ஏன் பிடிச்சுருக்குனு சொன்ன அதே ரீசன்தான். We have different ideologies."
"நான் இந்த முடிவு அவ்ளோ சீக்கிரம் எடுத்துரல."
"I don't know whether I can meet your expectations"
"எத வச்சு சொல்ற? எனக்காக நீ டிரஸ் செலக்ட் பண்ணணும்னு நெனக்கிறேன். நம்ம லைஃப்ல தேவையான எல்லாத்தையும் நாம சேர்ந்தே முடிவு பண்ணணும்னு நெனக்கிறேன். இதுல என்ன முடியாதுனு நெனக்கிற? இதுல என்ன தப்பு இருக்குனு நெனக்கிற?"
"அதுதான் பிரச்சினை. We have different ideologies; we have different tastes. கண்டிப்பா நாம சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. It will always end up with conflicts."
"I don't want my partner to be passive. உன்னோட டெர்ம்-ல சொல்லணும்னா மிக்சர் சாப்பிடுறவன் எனக்கு வேணாம். அவ்ளாதான்"
"எனக்கு எப்படி புரிய வைக்கிறதுனு தெரியல"
"இங்க பாரு. ரெண்டு பேரும் எல்லா விஷயத்துலயும் ஒத்துப் போகணும்னு அவசியம் இல்ல. சிலவிஷயத்துல நான் விட்டுக் கொடுக்கணும்; சில விஷயத்துல நீ விட்டுக் கொடுக்கணும். சிம்பிள்"
எந்த விஷயத்துல யாரு விட்டுக் கொடுக்கணும்னு பிரச்சினை வருமே!"
"ஐயா சாமி! ஆளை விடு. நீ ஆணியே புடுங்க வேணாம். வா! கிளம்பலாம்"
காசு கொடுத்துவிட்டு வண்டியின் அருகே வந்தான். ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். இப்போது அவனிடம் எதுவும் கேட்கவில்லை. இரண்டு பக்கமாக கால் போட்டு அமர்ந்தாள்.
அவனது தோளின் ஒருபக்கம் கன்னத்தை வைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள்.
"எதுவும் பேசாம வண்டிய எடு".
தொடரும்...

No comments:
Post a Comment