Sunday, May 7, 2017

ரேண்டம்-6

"ஒரு காம்பேக்ட் வீடு, அதுல ஒரு பால்கனி, அதுல ஒரு ஊஞ்சல்... லேட் நைட் நானும் அவனும் அதுல உட்கார்ந்து பேசணும். அவன் ஊஞ்சல்'ல; நான் அவன் மடி'ல... அந்த மாதிரி. மிட் நைட் வாக் போகணும்", தனது ஆசைகளை விவரித்துக் கொண்டிருந்தாள்.

"நடு ராத்திரில நாய் தொல்லை இருக்குமே!", குறுக்கிட்டான்.

"ரசனை கெட்டவனே! எப்படித்தான் உனக்கு இப்படியெல்லாம் தோணுமோ?"

"சரி.. சரி! Assuming ideal conditions... ஓகே! நீ சொல்லு"

"வீடு கலர்ஃபுல்லா இருக்கணும். பெரிய ஹால்.. ஹால்'ல ஒரு பெரிய டிவி.. ஒரு கௌச்.. சின்னதா... அழகா..", ஒரு ஒழுங்கில்லாமல் அங்கொன்றும் இங்கொன்றும் என விவரித்துக் கொண்டிருந்தாள்.

"பெட்ரூம்ல டிவி, லேப்டாப் எதுவும் கிடையாது. உயரம் கம்மியா ஒரு காட்; அதுல ஒரு பெட் கலர்ஃபுல்லா... வால் பேக்கிரவுண்ட்ல நானும் நீயும் சேர்ந்து எடுத்துகிட்ட கேண்டிட் ஃபோட்டோஸ்... எல்லாமே பிளாக் அண்ட் வொயிட்'ல", என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டான்.

"என்ன சொன்ன?"

"நானும் நீயும் எடுத்துகிட்ட...", என்று சொல்லி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

"ஹ்ம்ம். Freudian Slip"

"அப்படின்னா?"

"அப்றமா கூகுள் பண்ணிக்க. இப்ப நீ சொல்லு"

"ஒழுங்கா சொல்லு... என்னனு"

"அட லூசு! அப்றமா கூகுள் பண்ணிக்க. புரியல'னா... A picket to tittsburgh-னு ஒரு ஜோக் இருக்கு. அதைப் படி. புரியும். இப்ப நீ சொல்லு"

"போ! நான் சொல்லமாட்டேன். நீ என்கிட்ட போட்டு வாங்குற. நானும் உளறிட்டு இருக்கேன். நீயும் கடைசி வரைக்கும் ஏதும் சொல்லமாட்ட"

"சரி விடு! சாப்பிட ஏதாவது இருக்கா?"

"கெச்சப் வேணுமா?"

"என்னது?"

"டொமேட்டோ கெச்சப்"

ஷார்ட்ஸ் பாக்கெட்டிலிருந்த டொமேட்டோ கெச்சப் பாக்கெட் ஒன்றை எடுத்தாள். பாக்கெட்டின் ஒரு மூலையில் பல்லால் கடித்து கிழித்தாள். ஒரு துளியை வலக்கை ஆட்காட்டி விரலில் வைத்துக் கொண்டாள். கண்ணை மூடிக்கொண்டு நாக்கின் நடுவில் அத்துளியை வைத்தவள் தலையைச் சிலிர்த்து சப்பு கொட்டினாள். கண்ணைத் திறந்து அவளது செய்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் 'கெச்சப்ப்ப்' என்று அழுத்திச் சொன்னாள்.

"உனக்கு ஏதும் இல்ல", என்று ஷோஃபாவில் அவனருகே அமர்ந்தாள்.

"வீட்ல எப்ப கல்யாணம் பண்ணிக்கிறனு கேட்டுகிட்டே இருக்காங்க", மீண்டும் பேச்சைத் துவங்கினாள்.

"பையன் நல்லா இருந்தா பண்ணிக்க"

"கல்யாணம் பண்ணணுமேனு எல்லாம் பண்ண முடியாது. கல்யாணத்தைப் பத்தி நீ என்ன நெனக்கிற? அதாவது கல்யாணம், குடும்பம் அப்படிங்கிற சிஸ்டம் பத்தி. இங்க எல்லாமே marriage-centric life. அப்படித்தான?"

"கரெக்ட் தான். படிப்பு, வேலை எல்லாத்தையும் கல்யாணத்தை வச்சுதான் டிசைட் பண்றாங்க. அப்படி எல்லாம் பண்ணி கல்யாணம் பண்ணதுக்கு அப்றோ உடனே குழந்தை பெத்துக்கணும். அப்றோ அதோட கல்யாணத்துக்கு அத ப்ரிபேர் பண்ணணும். அப்றோ அதே சைக்கிள்"

"இததான் நானும் நெனச்சேன். அதுவும் பொண்ணுங்க நிலைமை இன்னும் மோசம். அதப் பத்தி ஒரு புக் எழுதலாம்னு இருக்கேன்"

"சூப்பர். எழுது. கல்யாணம்ங்கிற சிஸ்டமே தேவை இல்லைனுதான் நெனக்கிறேன். ரெண்டு பேருக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப்ப சிஸ்டமைஸ் பண்றதுக்காகனு எடுத்துக்கிட்டாலும் தாலி, சடங்குனு ஒரு சிஸ்டம்... அதுக்கு ஒரு புனித பிம்பம்... இதெல்லாம் தேவை இல்லனு நினைக்கிறேன்"

"அடி நாயே! எனக்கு தாலி வேணும். அதுவும் மஞ்சள் கயிறுதான். கோல்ட் எல்லாம் வேணாம்."

"சரி. தாலி கட்டிக்கலாம்; கல்யாணம் பண்ணிக்கலாம். ஆமா! இந்த வீடு எத்தனை ஸ்கொயர் ஃபீட்?"

"ஏன்? 850 ஸ்கொயர் ஃபீட். I think so"

"அவ்ளோ இடம் இருக்குல்ல?.கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துக்கலாமே!"

"திமிருடா நாயே உனக்கு", என்றபடி அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு அவனது மார்பில் தலைவைத்துச் சாய்ந்து கொண்டாள்.


தொடரும்...

No comments:

Post a Comment