Sunday, May 6, 2018

பெரியாரின் கனவு

பெரியார் சிலை உடைப்பு பிரச்சினையின்போது என்னுடன் பணிபுரியும் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,

'Who is Periyaar?' என்று கேட்டார்.

'He was a philosopher like Socrates', என்றேன்.

என்னுடன் இருந்த தமிழ்நாட்டுக்காரர் கொஞ்சம் எள்ளலாகச் சிரித்தார்.

'ஏன் சிரிக்கிறீங்க?', என்றேன்.

'இல்ல.. அவர் ஃபிலாசஃபரா?', என்றார்.

'பின்ன இல்லையா?', என்றேன்.

சிலநாட்களுக்குப் பிறகு மதிய உணவின்போது தமிழ்நாட்டின் கல்விமுறை குறித்து கேட்டுக்கொண்டிருந்தார் அந்த மேற்குவங்க நண்பர்.

'How much do you think I would have spent for my High school?', என்றேன்.

'Around 40000?', என்றார்.

'700rs including all the expenditure'

'However you need to spend money for coaching classes, for entrance exams. Right?'

'That's why we don't have entrance exams. Do you remember that I told you about Periyaar? He is the one who is behind all these schemes', என்று சொல்லி அவரது குலக்கல்வி எதிர்ப்புக் கொள்கை, இந்தி எதிர்ப்பு, வர்ணாசிரம ஒழிப்புக் கொள்கை, இடஒதுக்கீடு ஆதரவு போன்றவை மூலம் எல்லோருக்கும் கல்வியும் அதன்மூலம் சமூகநீதியும் கிடைக்க வேண்டிய அவரது உழைப்பு குறித்து விளக்கினேன். ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கூடங்கள், இலவச புத்தகம், மதிய உணவு, நுழைவுத் தேர்வு ரத்து, எஞ்சினியரிங் கவுன்சிலிங்கிற்கு பேருந்தில் கட்டணச் சலுகை, முதல் தலைமுறையாக பட்டம் படிப்பவர்களுக்கான சலுகை, 69% இடஒதுக்கீடு, இஸ்லாமியர் மற்றும் அருந்ததியர்களுக்கான உள்இட ஒதுக்கீீடு என அனைத்தையும் பற்றிச் சொன்னேன்.

எல்லாம் சொல்லிமுடித்துவிட்டு, 'this is why I called him a philosopher that day. His thoughts were ahead of his time. NEET is the one which could destroy all his work. That's why TN is against NEET', என்றேன்.

பெரியாரின் கனவைத்தான் நீட் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக இன்று நொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment