Friday, May 11, 2018

பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற வாதத்திற்கு ஐன்ஸ்டீனது God doesn't play dice என்கிற கூற்று பல காலமாக பல புரிதல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரியில் படிக்கும்போது  ஸ்டீபன் ஹாக்கிங்கின் The Grand Design புத்தகத்தை மொழி மற்றும் புரிதல் பிரச்சினை காரணமாக நானும் வைரமுத்துவும் சேர்ந்தே வாசிக்க முடிவெடுத்து வாசித்தோம். அதில் ஐன்ஸ்டீனது இந்தக் கூற்று குறித்து ஹாகிங் குறிப்பிட்டிருப்பார். அதன் அர்த்தம் மற்றும் பின்னணி குறித்து கூகுள் செய்தபோது கூகுள் டிரான்சிலேட்டர் கொடுத்த அர்த்தம்தான் 'கடவுள் பகடை விளையாடமாட்டார்' என்பது. எனது முந்தைய போஸ்டில் அந்த நிகழ்வை பகடி செய்தேனே தவிர அதுகுறித்த என் பார்வையைக் குறிப்பிடவில்லை.

ஐன்ஸ்டீன் உட்பட பல அறிவியலாளர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் தற்போதைய நிலை மற்றும் இயக்கத்தைக் கணக்கிட்டுவிட்டால் இந்தப் பிரபஞ்சத்தின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் கணக்கிட்டு விடலாம் என்று கருதினார்கள். ஆனால் ஹெய்சன்பர்க் முன்வைத்த நிலையில்லாக் கோட்பாடு (The uncertainty principle) பிரபஞ்சத்தின் நிலை மற்றும் இயக்கத்தை ஒரே நேரத்தில் துல்லியமாக கணக்கிட இயலாது; மேலும் எந்தவொரு நிகழ்விற்கும் ஒரேயொரு வரலாறு இருக்க அவசியம் இல்லை ; வாய்ப்புள்ள பல வரலாறுகள் இருக்கலாம் என்று வாதிட்டது. ஐன்ஸ்டீனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனாலேயே 'God doesn't play dice' என்றார்.

கமல்ஹாசன் தனது தசாவதாரம் திரைப்படத்தில் Chaos Theory-ஐ அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்து இருப்பார். படத்தின் கதையைக் கமல் விவரிக்கும் ஆரம்பக்காட்சியில் 'சகல நிகழ்வுகளின் கோர்வையே உலக சரித்திரம்' என்றொரு வசனம் வைத்திருப்பார். பிரபஞ்சத்திற்கும் இது பொருந்தும். எனது நிலையில்லாக் கோட்பாடு குறும்படத்திற்கு Chaos theory மற்றும்  The uncertainty principle ஆகியவற்றை அடிப்படையாக வைத்தே கதை யோசித்து வைத்திருந்தேன். மேற்சொன்ன வசனமும் 'There is no single history for events' என்ற வசனமும் அந்த டீசரில் இடம்பெற்றதற்கு காரணமும் இதுவே.

இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பைக் கவனித்தால் உண்மை நமக்கு விளங்கும். This universe is randomly perfect and perfectly random. எல்லாமே மிகச்சரியாக இருந்தால் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். எந்தவொரு இரண்டு மனிதர்களும் அமைப்பு மற்றும் குணத்தில் ஒரே மாதிரியாக இருக்க முடியாது.

பொறியியலின் அடிப்படையே இதுதான். எந்த இரு தயாரிப்பும் ஒரேமாதிரி இருக்காது. ஆனால் முடிந்த அளவு ஒரேமாதிரி இருக்க வேண்டும். இதற்காகவே ஒட்டுமொத்த உற்பத்தி துறையும் வேலை செய்து கொண்டிருக்கிறது.

இயற்கையில் இந்த randomness நிரம்பிக் கிடக்கிறது. I am an admirer of this randomness. எனது எண்ணங்களும் செயல்பாடுகளும் அப்படித்தானிருக்கும். நான் எழுதிய கதைக்கு ரேண்டம் என்று தலைப்பு வைத்தேன். கதையும் அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகளின் தொகுப்பாக அமையச் செய்தேன்; கதையின் மையமும் மன ஓட்டங்களின் இந்தத் தன்மையே.

இந்த randomness ஐன்ஸ்டீனது கூற்றுக்கு விளக்கமளித்திருக்கும். Yes. God plays dice. ஆனால் இதன்மூலம் கடவுள் இருக்கிறார் என்கிற முடிவுக்கு வந்துவிடவேண்டிய அவசரமும் இல்லை. அதற்கும் இந்த randomness தான் பதில். இயற்கையின் இந்த ரேண்டம் தன்மையை ரசிப்பதற்கு நமக்கு அவகாசங்கள் கிடைப்பதில்லை. ரசிக்க விரும்புபவர்கள் கொஞ்சம் அமைதியாக அமர்ந்து இந்தப் பாடலைக் கேட்டுப்பாருங்கள்.

'இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வழியும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்'

2 comments: